ஒலிம்பிக்: இந்தியாவுக்கு இன்று மறக்க முடியாத ஒரு நாள்!

Published:

olympic banner kvb

ஓலிம்பிக் விளையாட்டுகள் 07.08.2021
இந்தியாவுக்கு ஒரு மறக்க முடியாத நாள்

– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

டோக்யோ விளையாட்டுப் போட்டியில், ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற இளம் சாதனையாளரான நீரஜ் சோப்ராவின் நிகரற்ற திறனைப் பாராட்டி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒட்டுமொத்த இந்திய தேசமே கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. ஹரியானா மாநிலத்திச் சேர்ந்த, 23 வயதான அவர் ஒலிம்பிக்கில் தனிநபர் தங்கத்தை வென்ற இரண்டாவது இந்தியர் ஆவார், அவர் இந்திய இராணுவத்தில் ‘சுபேதார் மேஜர்” பதவி வகிக்கிறார். இறுதிப் போட்டியில் 87.58 மீட்டருக்கு ஈட்டி எறிந்து அவர் சாதனை படைத்துள்ளார். 
neeraj chopra
neeraj chopra

கோல்ப் வீராங்கனை அதிதி அசோக் ஒரு வரலாற்று பதக்கத்தை இழந்து 4ஆவது இடத்தைப் பிடித்தார். அதிதியின் டோக்கியோ ஒலிம்பிக், கால்ஃப் விளையாட்டுப் போட்டிகளில் நேறு வரை (மூன்றாவது சுற்று வரை) இரண்டாவது இடத்தில் இருந்தார். இது மிகவும் வரலாற்று சிறப்புமிக்கது.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

ரியோவில் அவர் 41 வது இடத்தைப் பிடித்தது மட்டுமல்லாமல், டோக்கியோவில் நடந்த முதல் மூன்று சுற்றுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தார், இதுவரை எந்த இந்திய கோல்ப் வீரரும் இச்சிறப்பை அடையவில்லை. அடையவில்லை.

‘தினசரி’ இணைய இதழில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் மிகக் குறுகிய வித்தியாசத்தில் பதக்க வாய்ப்பு இழந்த மில்கா சிங், பிடி உஷா, தீபா கர்மாகர், ஜாய்தீப் கர்மாக்கர் ஆகியோரைப் பற்றி எழுதியிருந்தோம். அவர்களைப் போல அதிதி அசோக்கும் பெண்கள் கால்ஃப் விளையாட்டில் 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

உலக நம்பர் 1 மற்றும் எல்பிஜிஏ சாம்பியன்ஷிப் வெற்றியாளர் நெல்லி கோர்டா தங்கப் பதக்கத்தையும், இனமி மோன் – (உலக எண் 28) வெள்ளிப் பதக்கத்தையும், லிடியா கோ (உலக எண் 11) வெண்கலப்பதக்கத்தையும் பெற்றனர். அதிதி அசோக் (உலக எண் 200) நான்காவது இடத்தைப் பெற்றார்.

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, டவுலட் நியாஸ்பெக்கோவை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்துடன் இந்தியா திரும்புகிறார்.

ALSO READ:  வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!

டோக்கியோ ஒலிமிபிக்ஸ் 2021 இல் இந்தியப் பதக்கம் வென்றவர்கள்

  1. பளு தூக்குதலில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் (பெண்கள் 49 கிலோ)
  2. ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம்
  3. மகளிர் ஒற்றை பாட்மிண்டனில் பிவி சிந்து வெண்கலப் பதக்கம்
  4. பெண்கள் வெல்டர் வெயிட் குத்துச்சண்டையில் லவ்லினா போர்கோஹைன் வெண்கலப் பதக்கம்
  5. ஆண்கள் 57 கிலோ மல்யுத்தத்தில் ரவி குமார் தஹியா வெள்ளிப் பதக்கம்
  6. ஆண்கள் ஃப்ரீஸ்டைல் 65 கிலோவில் பஜ்ரங் புனியா வெண்கலப் பதக்கம்
  7. ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் (இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவிலிருந்து முதல் தங்கப் பதக்கம் வென்றவர் 2021)

நாளை இந்தியர்கள் போட்டியிடும் எந்த விளையாட்டும் இல்லை. டோக்கியோ ஒலிம்பிக் 2020 நாளை முடிவடைகிறது.

Related articles

Recent articles

spot_img