ஐபிஎல்: சென்னை வெற்றி, மும்பை தோல்வி!

Published:

ipl 2021
ipl 2021

ஐ.பி.எல் 2021 – இரண்டு ஆட்டங்கள்
– சென்னை வெற்றி, மும்பை தோல்வி
***
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

முதல் ஆட்டம்

முதல் ஆட்டம் அபுதாபியில் சென்னை, கொல்கொத்தா அணிகளுக்கிடையே நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கொத்தா மட்டையாட முடிவுசெய்தது. முதல் ஓவரில் ஷுப்மன் கில் அவுட்டானார். ஆறாவது ஓவரில் அதிரடி ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயர் அவுட்டானார். ராகுல் திரிபாதி (45), நிதீஷ் ராணா (37), ரசல் (20), தினேஷ் கார்த்திக் (26) அடித்து அணியின் ஸ்கோரை 20 ஓவர் முடிவில் ஆறு விக்கட் இழப்பிற்கு 171 என்ற அளவிற்கு கொண்டு நிறுத்தினர்.

சென்னை அணி சிறப்பாகத் தொடங்கியது. ஆனால் ஒரு கட்டத்தில் 21 பந்துகளில் 34 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை. சாதாரனமாக ஆடி முடிக்க வேண்டிய ஒரு ஆட்டத்தை சென்னை அணி கைநழுவ விடுகிறதோ என அனைவரும் நினைக்கும்போது ரவீந்தர் ஜதேஜா வந்தார். மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, தோனி ஆகியோ தவறவிட்ட அந்த அதிரடி ஆட்டத்தை அவர் ஆடினார். பதினெட்டாவது ஓவரின் மூன்றாவது பந்து ஆறு, நான்காவது பந்து ஆறு, ஐந்தாவது பந்து நாலு, ஆறாவது பந்தும் நாலு என 22 ரன்கள் அடித்தார்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

கடைசி ஓவரில் நாலு ரன் அடிக்கவேண்டும். முதல் பந்தில் சாம் கரன் அவுட். இரண்டாவது பந்தில் ரன்னில்லை. மூன்றாவது பந்தில் மூன்று ரன். இன்னமும் ஒரு ரன் எடுக்கவேண்டும். நாலாவது பந்தில் ரன்னில்லை. ஐந்தாவது பந்தில் ஜதேஜா அவுட். கொல்கொத்தா கிட்டதட்ட வெற்றியைக் கொண்டாடிவிட்டார்கள். ஆனால் கடைசிப் பந்தில் சாஹர் ஒரு ரன் எடுத்ததால் சென்னை அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் சென்னை புள்ளிப் பட்டியலில் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

ipl2021
ipl2021

இரண்டாவது ஆட்டம்

இரண்டாவது ஆட்டம் பெங்களூருவுக்கும் மும்பைக்கு இடையே துபாயில் நடந்தது. டாஸ் வென்ற மும்பை பெங்களூருவை முதலில் ஆடச்சொன்னது. தொடக்க ஆட்டக்காரர் படிக்கல் இரண்டாவது ஓவரில் ரன் எடுக்காமல் அவுட்டானார். கோலி (51), பரத் (32), மேக்ஸ்வெல் (56) எடுத்த ரன்களால் அணி 165 எடுத்தது. ஒரு கட்டத்தில் 180 வரை ஸ்கோர் போகக்கூடும் என்ற நிலை இருந்தது. ஆனால் பும்ரா எடுத்த இரண்டு விக்கட்டுகள் ரன் ரேட்டைக் குறைத்தன.

ALSO READ:  FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

மும்பை அணி மோசமாக ஆடியது. அந்த அணியின் மொத்த ஸ்கோரான 111இல் ரோஹித் (43), டி காக் (24) உதிரிகள் (7) போக மீதமுள்ள 34 ரன்களை மீதமுள்ளவர்கள் எடுத்தனர். அதுவும் அடுத்தடுத்து ஹார்திக் பாண்ட்யா, பொலார்ட், ராஹுல் சாஹார் அவுட்டானது அந்த அணியை தோல்விக்குத் தள்ளியது. மும்பை ஆட்டத்தில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால் கொஞ்சம் கவனமாக இனி ஆடவேண்டும். மோசமான தோல்வியால் மும்பை அணி ஏழாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img