பெங்களூரு: 3 மகள் ஒரு மகன் உள்பட பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு நகரபாவி எம்.பி.எம். லே அவுட் பகுதியில் வசித்தவர் தொலைபேசி ஊழியரான கங்கா ஹனுமய்யா (57) . இவரது மனைவி ஜெயலக்ஷ்மா (54 ). இத்தம்பதிக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன். மூத்த மகள் ஹேமலதா (30) பொறியாளராகவும், இரண்டாவது மகள் விமலா (28) ரயில்வேயிலும் பணி புரிந்து வருகின்றனர். மகன் யாதிஷ் (26) வேலை தேடிக் கொண்டிருக்கிறார். கடைசி மகள் நேத்ராவதி (24) பொறியியல் கல்லூரி மாணவி. இந்நிலையில், இன்று அவர்களது வீட்டில் ஆள் நடமாட்டம் இன்றி அமைதியாக இருந்ததை அருகில் இருந்தவர்கள் கவனித்துள்ளனர். வீட்டில் திறந்திருந்த ஜன்னல் வழியே பார்த்த போது, ஒருவர் தூக்கில் தொங்குவது தெரிந்தது. உடனே போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவைத் திறந்து பார்த்த போது, வீட்டில் உள்ள அனைவருமே தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப் பட்டது. தொடர்ந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை: பெங்களூருவில் பரிதாபம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari