
தென்காசியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அழகப்பபுரம் கிராமத்தில் நடத்திய நாட்டு நலப்பணித்திட்ட முகாமின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினரும் TNDSOF அமைப்பின் மாநில செயலாளருமான வைகை R குமார் மற்றும் ரோட்டரி கிளப் தலைவர் சைரஸ் கமலம், தெட்சிணாமூர்த்தி டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் திருஇலஞ்சி குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் வைகை குமார், “சாலை விதிகளை கடைப்பிடித்து சாலையை பிறரோடு பகிர்ந்து வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பாதுகாப்புடன் பயன்படுத்தி விபத்தில்லா தமிழகம் உருவாக்கப்பட்ட வேண்டும். மாற்றம் நம்மில் துவங்கப் பட வேண்டும். NSS மாணவர்களாகிய நீங்கள் இந்த கிராமத்தில் விழிப்புணர்வை துவங்கி உங்கள் சக பள்ளி தோழர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று விழிப்புணர்வு உரையாற்றினார்.
திருஇலஞ்சி குமரன் மது போதை ஒழிப்பு பற்றி உரையாற்றினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆசிரியர் குத்தாலம் வரவேற்புரையாற்ற உதவி திட்ட அலுவலர் முருகேசன் நன்றி உரையாற்றினார்.





