பேஸ்புக்கில் பழகியது 2 மாசம்தான்! ‘பத்மாவத்’ பார்க்க அழைத்துப் போய் இளம்பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது!

Published:

பேஸ் புக்கில் பழகி இரண்டு மாதம் தான் ஆகியுள்ளது, அதற்குள் ஹைதராபாத்தில் பேஸ்புக் நண்பருடன் பத்மாவத் பார்க்க போனார் இளம்பெண். அங்கே தியேட்டரில் வைத்து அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார் அந்த இளைஞர். காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்தப் பெண் அளித்த புகாரில் இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் இரண்டு மாதங்களுக்கு முன் 19 வயது பெண்ணும், இளைஞர் ஒருவரும் அறிமுகமாகியுள்ளனர். இரண்டு மாதமாக நட்பு நீடித்த நிலையில் பத்மாவத் திரைப்படம் பார்ப்பதற்காக தனது நண்பருடன் ஹைதராபாத் பிரசாந்த் திரையரங்கிற்கு சென்றுள்ளார். தியேட்டரில் மக்கள் கூட்டம் இல்லாததை பயன்படுத்தி அந்த இளைஞர் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பலாத்காரத்துக்கு உள்ளான பெண்ணின் பிறப்புறுப்புகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணின் புகாரையடுத்து சம்பந்தப்பட்ட நபர் ஜனவரி 31ல் கைது செய்யப்பட்டுள்ளார்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

பிரச்னைக்கு உள்ளான பெண்ணை காப்பாற்றாமல் விட்ட காரணத்துக்காக தியேட்டர் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் வந்து செல்லும் தியேட்டரிலேயே பலாத்கார சம்பவம் நடந்துள்ளது பரப்பரப்பாகப் பேசப் படுகிறது.

Related articles

Recent articles

spot_img