நீட் தேர்வு மொழிபெயர்ப்பாளர்கள் தவறால் மாணவர்கள் தண்டனையை அனுபவிப்பது இரக்கமற்றது என்று ராமதாஸ் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கும் விவகாரத்தில், தவறு செய்தது எந்த அரசாக இருந்தாலும் மாணவர்களுக்கு நீதி தேவை என்றும்,. அந்த மாணவருக்கு மீதமுள்ள 30 தவறான வினாக்களுக்கு மட்டும் 120 கருணை மதிப்பெண்கள் வழங்கினால் போதுமானது. இதில் எந்த குழப்பமும் இல்லை. இதைக் காரணம் காட்டி மாணவர்களுக்கு நீதியை தடுக்கக்கூடாது.
தவறு யாருடையதாக இருந்தாலும் அதற்கு மாணவர்கள் பலிகடா ஆக்கப்படக்கூடாது. எனவே, தமிழக மாணவர்கள் பக்கம் உள்ள நியாயத்தையும், உயர் நீதிமன்றத் தீர்ப்பையும் மதித்து, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவதாக உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்து இந்தச் சிக்கலை சிபிஎஸ்இ முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.



