அப்பாடா… ஒருவழியா சரியாச்சு! பயனாளர்களின் மண்டையைப் பிய்க்க வைத்த வாட்ஸ்அப் கோளாறு!

சற்றுமுன் தொழில்நுட்பம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
whats up - 2026

உலகின் பல்வேறு இடங்களிலும் வாட்ஸப்பில் வீடியோ, புகைப்படம் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டதால், பயனாளர்கள் அவதிப் பட்டனர்.

வாட்ஸ் அப்பில் இருந்து மற்றவருக்கு புகைப்படம் அனுப்ப முடியவில்லை என்றும் வாட்ஸ்அப் சேவை முடங்கியது.. என்றும் தகவல்கள் பரவின. சிக்கல் குறித்து வாட்ஸப் நிர்வாகம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்று பலரும் செய்திகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இதை அடுத்து டிவிட்டரில், #Whatsappdown என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆனது #Whatsapp

பின்னர் ஒருவழியாக, வாட்ஸப் கோளாறு சரிசெய்யப்பட்டது. இனி வாட்ஸப்பில் படம், வீடியோ அனுப்பலாம் என்று செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்கள். புதிய அப்டேடுக்காக இந்தக் கோளாறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் சரிசெய்யப்பட்டது என்றும் தகவல்கள் பரிமாறிக் கொண்டார்கள்.

பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப் செயலியை வாங்கிக் கொண்டுள்ளது. பேஸ்புக்கிலும் இது போல் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறு ஏற்படும். அது போல் தற்போது வாட்ஸ் அப்பில் வீடியோ, புகைப்படங்களை அனுப்புவதில் சிக்கல் திடீரென ஏற்பட்டது.

03 June16 Whatsapp - 2026

வாட்ஸ் அப் என்ற சமூக வலைதளத்தை உலக அளவில் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள், செல்போன் கான்டாக்ட் எண்கள், லொகேஷன் உள்ளிட்டவற்றை அனுப்பி வருகிறோம். இதில் நெட் இணைப்பு இருந்தால் போன் கால்களையும் செய்ய முடியும்.

இந்த நிலையில் வாட்ஸ் அப்பில் புகைப்படம், காணொலி காட்சிகள் உலகில் பல்வேறு நாடுகளில் அனுப்ப முடியவில்லை. வாட்ஸ் அப் சேவை பாதிக்கப்பட்டதால் வாட்ஸ் அப் டவுன் (#Whatsappdown) என்ற ஹேஷ்டேக் முதலிடத்தில் டிரென்டாகியுள்ளது. இது போன்று வாட்ஸ் அப் முடங்கியுள்ளதால் பயனாளிகள் சிரமத்தில் தவித்தனர். இது ஹேக்கர்களின் வேலையாக இருக்கலாம் என்றும் சைபர் வாருக்கான முதல் வேலையாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், புதிய அப்டேட்க்காக இது போன்ற கோளாறு ஏற்பட்டதாக வாட்ஸ் அப் நிறுவனம் தகவல் தெரிவித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.