திருப்பதி அருகே சூறைக்காற்று மழை; கோயில் பந்தல் சரிந்து 4 பேர் உயிரிழப்பு

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

APSRTC bus station in Tirupati - 2026

திருப்பதி: திருப்பதி அருகே சூறைக்காற்று மழையால் கோயில் பந்தல் சரிந்து விபத்து ஏற்பட்டது. இதில், 4 பக்தர்கள் உயிரிழந்தனர்.

ஆந்திரா மாநிலம் கடப்பாவில் உள்ள கோதண்ட ராமர் கோயிலில், நேற்றிரவு சீதா – ராம திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இதையொட்டி, அங்கு பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அப்பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், பந்தல் திடீரென சரிந்து விழுந்தது. மின் கம்பிகளும் அறுந்ததால் கோயிலில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இந்த விபத்தில் நான்கு பக்தர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த 52 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Related articles

Recent articles

spot_img