
பரோலில் வந்த சசிகலா, இன்று மாலை மீண்டும் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைக்குத் திரும்புகிறார்.
கடந்த 20ம் தேதி உடல் நலக் குறைவு காரணமாக புதிய பார்வை இதழின் ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் காலமானார். இதையொட்டி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து பரோலில் வந்த சசிகலா தஞ்சையில் தமது கணவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடைய பரோல் காலம் இன்றுடன் முடிவடைகிறது.
இதனை அடுத்து அவர் சாலை மார்க்கமாக இன்று பெங்களூர் செல்கிறார். இன்று மாலைக்குள் சசிகலா சிறைக்கு திரும்ப இருப்பதாக கூறப்படுகிறது.



