வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்

Published:

income - 2026

சென்னை: வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும்.

இதன் காரணாக இன்று வருமான வரி அலுவலகங்கள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் வசதிக்காக வருமான வரித்துறை அலுவலகங்கள் கடந்த இரண்டு நாட்களாக இயங்கி வருகின்றன.

இதே போல் வங்கிகளும் இன்று இரவு 8 மணி வரை இயங்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி போன்ற அரசு விடுமுறை நாட்களை அடுத்து சனி, ஞாயிறு ஆகிய நாட்களும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏப்ரல் 2ம் தேதி வங்கி ஆண்டு கணக்கு முடியும் நாளாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 5 நாட்கள் விடுமுறையால் மக்களுக்குப் பண பரிவர்த்தனை களில் சிக்கல் நீடிக்கக்கூடாது என்பதற்காக இன்று இரவு வரை அனைத்து வங்கிகளும் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஆன்லைன் பரிவர்த்தனைகள் இரவு 12 மணிவரை செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img