கச்சா பாதாம் பாடலுக்கு டான்ஸ் ஆடும் குட்டி பெண்! வைரல்!

Published:

girl - 2026

பிர்பூம் மாவட்டத்தின் லக்ஷ்மிநாராயண்பூர் பஞ்சாயத்தில் உள்ள குரல்ஜூரி கிராமத்தில் வசிக்கும் புவன் பத்யாகர் தெரு ஓரத்தில் கடலை விற்று நாள் ஒன்றுக்கு ரூ.300 சம்பாதித்து வந்தார்.

அவரது வாடிக்கையாளர் ஒருவர் வேர்க்கடலை விற்கும் போது ‘கச்சா பாதாம்’ பாடும் வீடியோவை படமாக்கி சமூக ஊடகங்களில் பதிவேற்றியதை அடுத்து இந்த பாடல் இணையத்தில் மிகவும் வைரலானது.

அவர் பாடிய இந்த பாடல் இணையத்தில் வைரலாகியதுடன் சமூக வலைதளங்களில் வைரலாகிய அந்த வியாபாரியின் பாடல் வரியையே அடிப்படையாக கொண்டு கச்சா பாதம் என்ற ஆல்பம் சாங்கும் உருவாக்கப்பட்டு வெளியாகி மாபெரும் வைரலானது.

யூ ட்யூப் தளத்துக்கு சென்றால், வைரலாகி பெரும் ஹிட் ஆன, கச்சா பாதாம் பாடலுக்கு பல இளைஞர்களும் யுவதிகளும் இந்தப் பாட்டுக்கு ஆடும் காட்சியை நாம் பார்க்கலாம். பாடலின் மெட்டும் குரலும் ஒருவகை உள்ளார்ந்த ஈர்ப்பை நம் மக்களுக்கு கிளர்ந்தெழ வைத்திருக்கிறது.

வைரலான கச்சா பாதம் இணையம் முழுவதும் ஆக்கிரமித்துள்ள நிலையில், தற்போது அந்த பாடலுக்கு நடனம் ஆடியுள்ள ஒரு சிறுமி, தற்போது இணையத்தை கலக்கி வருகிறார். தனது அட்டகாசமான நடனம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!
katcha bhadam - 2026

வைரலான கச்சா பாதம் இணையம் முழுவதும் ஆக்கிரமித்துள்ள நிலையில், தற்போது அந்த பாடலுக்கு நடனம் ஆடியுள்ள ஒரு சிறுமி, தற்போது இணையத்தை கலக்கி வருகிறார். தனது அட்டகாசமான நடனம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் ஷரண் பகிர்ந்துள்ள வீடியோவில், ஒரு சிறுமி பள்ளி சீருடையில் நடனமாடுவதை காணலாம். அழகிய அசைவுகள் மற்றும் முக பாவனைகள் மூலம் சிறுமி நடனமாடுவதைக் காணலாம்.

Related articles

Recent articles

spot_img