
செங்கோட்டை அறம்வளர்த்தநாயகி உடனுறை குலசேகரநாதசுவாமி திருக்கோவிலில் வைத்து கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை மற்றும் மாதர் மாநாடு நடந்தது.
நிகழ்ச்சிக்கு விவேகானந்தா கேந்திர கிராம முன்னேற்ற திட்ட செயலாளா் ஐயப்பன் தலைமைதாங்கினார். பிஎல்எம்.போர்ட்ஸ் கிளப் நிறுவனத்தலைவா் பொறியாளா் எல்எம்.முரளி, தொழிலதிபர் மோகன்படேல், முன்னாள் நகர்மன்ற உறுப்பினா் மணிமகேஸ்வரன், முன்னாள் இராணுவ வீரர் நடராஜன், ஆகியோர் முன்னிலைவகித்தனா். கேந்திர மாவட்ட பொறுப்பாளா் கருப்பசாமி அனைரையும் வரவேற்று பேசினார்.
கேந்திர சகோதரி தெய்வானை இறைவணக்கம் பாடினா். இலஞ்சி விவேகானந்தா கேந்திர பாலா் பள்ளி மாணவியா்களின் கலைநிகழ்ச்சி தனித்திறன் சமய உரையாற்றினா்.
சாம்பவர்வடகரை சமய வகுப்பு மாணவி வரவேற்பு நடனம் ஆடினார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக குற்றாலம் ஐந்தருவி ஸ்ரீசாரதா ஆஸ்மர நிர்வாகி யதீஸ்வரிஆத்மப்ரியா அம்பாள், ஆசியுரை வழங்கினார். பின்னா் யதீஸ்வரி ஆத்மப்ரியா அம்பாள், ரமீலாமோகன்படேல், செண்பகவல்லிமாடசாமி, மல்லிகாவேல்சாமி, முத்துமாரிலெட்சுமணன் ஆகியோர் முதல் குத்துவிளக்கினை ஏற்றி பூஜையை துவக்கி வைத்தனா்.
திருவிளக்கு பூஜையினை கேந்திர சகோதரிகள் சந்திரா, சரஸ்வதி, ஆகியோர் நடத்தினர். பூஜையில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சுவாமி, அம்பாள் தரிசனம் பெற்று சென்றனா்.
முன்னதாக சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் மற்றும் நன்கொடையாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சமுதாய பெரியோர்கள், ஆன்மீக அன்பர்கள், சமூக ஆர்வலா்கள் விவேகானந்தா கேந்திர தொண்டர்கள், தன்னார்வலா்கள், ஆயுள்கால உறுப்பினா்கள் தொண்டர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் கேந்திர மருத்துவமனை உதவியாளா் கண்ணன் நன்றி கூறினார்.





