
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரைத் திருவிழாவுக்கு கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு கொடியேற்றம் வைபவத்தில், மதுரை மேயர் இந்திராணி, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, மதுரை நகர் காவல் ஆணையாளர் டாக்டர் லோகநாதன், கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் மற்றும் கோயில் இணையர் கிருஷ்ணன் மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை வைகை நதியில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறவுள்ளது. இதில் பல லட்சம் வைகை ஆற்றில் திரண்டு கள்ளழகரை தரிசித்து விட்டு செல்வது வழக்கமாக உள்ளது. அன்றைய தினம் மதுரை மாவட்டத்தில் சிறப்பு நகரப் பேரூந்துகள் இயக்கப்படும்.
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா இன்று ஏப் 29 செவ்வாய்க்கிழமை காலை வேத பாராயண முறைப்படி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. பல்லாயிரகணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் (ஏப்ரல்-மே) வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த (2025) ஆண்டு சித்திரைத் திருவிழா இன்று (ஏப்ரல் 29) கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இன்று காலை 9:55 முதல் 10:19 மணிக்குள், சுவாமி சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு, மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது.
விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சிக் திருக்கல்யாணம், அழகரின் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தைக் காண தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அருகில் உள்ள மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் வாழும் இந்துக்கள் உலக சுற்றுலா பிரியர்கள் என லட்சக்கணக்கான பக்தர்கள், மதுரைக்கு வருகை தருவர்.
சிறப்பு வாய்ந்த மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா இன்று காலை சுவாமி சன்னதி முன்பாக உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக கொடிமரம் முன்பு மீனாட்சி, சுந்தரேஸ்வரர் ப்ரியாவிடையுடன் எழுந்தருளினார்.
பூஜைகளுக்கு பின்னர் மங்கள வாத்தியங்கள், வேதமந்திரங்கள் முழங்கிட காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
சித்திரைத் திருவிழா இன்று துவங்கியுள்ள நிலையில் அம்மனும் சுவாமியும் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலாவும், விழாவின் முக்கிய நிகழ்வுகளாக வரும் 6-ம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், 8-ம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், 9-ம் தேதி தேரோட்டமும் நடைபெறும்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் 12-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியதால் மதுரை நகர் விழாக்கோலம் பூண்டுள்ளது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சங்களாக ஏப்ரல் 29 (செவ்வாய்) இன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
மே 6 (செவ்வாய்): மீனாட்சி அம்மனின் பட்டாபிஷேகம், இதில் மீனாட்சி மதுரையின் அரசியாக முடிசூடப்படுகிறார்.
மே 8 (வியாழன்): மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இது திருவிழாவின் உச்ச நிகழ்வாகும். இந்த நாளில் பக்தர்கள் திருமண வைபவத்தைக் காண கூடுவர், மேலும் பல பெண்கள் தங்கள் தாலிக்கயிறு மாற்றிக் கொள்வர்.
மே 9 (வெள்ளி): மீனாட்சி திருத்தேரோட்டம், இதில் மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் தங்கத் தேரில் பவனி வருவர். தேர் சுமார் 14.5 அடி உயரமும், 6.964 கிலோ தங்கத்தால் அலங்கரிக்கப்படும்.
மே 10 (சனி): கள்ளழகர் புறப்பாடு, இதில் அழகர் கோயிலில் இருந்து கள்ளழகர் மதுரை நோக்கி பயணம் தொடங்குவார்.
மே 11 (ஞாயிறு): கள்ளழகர் எதிர்சேவை, இதில் கள்ளழகர் மதுரையில் பக்தர்களால் வரவேற்கப்படுவார்.
மே 12 (திங்கள்): கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல், இது திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வாகும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றின் கரையில் கூடுவர்.
இன்று முதல் துவங்கிய மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் முதல் நாளிலேயே அதிக அளவில் வரத்து வாங்கியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது வரும் தெரு கல்யாணத்தன்று மிக முக்கிய நிகழ்வாக பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து வழங்குவதற்கு ஏற்பாடுகள் தற்போது நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மே 8 ல் நடக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை காண அறநிலையத்துறையின் hrce.tn.gov.in இணையதளத்திலும், கோயில் இணையதளத்திலும் maduraimeenakshi.hrce.tn.gov.in இன்று (ஏப்.,29) முதல் மே 2 இரவு 9:00 மணி வரை ரூ.500, ரூ.200 கட்டண சீட்டு பெறமுன்பதிவு செய்யலாம். ரூ.500 கட்டணச்சீட்டு பதிவில் ஒருவர் இரண்டு டிக்கெட் மட்டுமே பதிவு செய்ய முடியும்.ரூ.200 கட்டணச்சீட்டு பதிவில் ஒருவர் மூன்று டிக்கெட் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஒரே நபர் ரூ.500, ரூ.200 கட்டண சீட்டை பதிவு செய்ய முடியாது.
மே 3க்குள் தகவல் தெரிவிப்பு; ஆதார் கார்டு, போட்டோ அடையாள சான்று, அலைபேசி, இ-மெயில் முகவரியுடன் முன்பதிவு செய்ய வேண்டும்.கணினி மூலம் குலுக்கல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு மே 3க்குள் தகவல் தெரிவிக்கப்படும். தகவல் கிடைக்கப் பெற்றவர்கள் மே 4 முதல் 6 வரை காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரைமேலசித்திரை வீதியில் உள்ளபிர்லா விஷ்ரம் தங்கும் விடுதி மையத்தில் தங்களுக்கு வந்த தகவலை காண்பித்து பணம் செலுத்தி கட்டணச்சீட்டினை பெற்றுக் கொள்ளலாம். திருக்கல்யாணத்தன்று அதிகாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை மட்டுமே கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ரூ.500 கட்டண சீட்டு உள்ளவர்கள் வடக்கு கோபுரம் வழியிலும், ரூ.200 கட்டணச்சீட்டு உள்ளவர்கள் வடக்கு – கிழக்கு சித்திரை வீதி சந்திப்பு அருகே உள்ள பாதை வழியாக வந்து வடக்கு கோபுரம் வழியாகவும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இத்திருவிழாவின் இணைப்பாக நடைபெறும் அழகர் கோயில் திருவிழா மே 8ம் தேதி தொடங்குகிறது. மே 10ம் தேதி மாலை 6.10 மணிக்கு மேல் 6.25 மணிக்குள் தங்க பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார். மே 11ம் தேதி அழகருக்கு மூன்று மாவடியில் எதிர்சேவை நடக்கிறது. மே 12ம் தேதி அதிகாலை 5.45 மணிக்கு மேல் 6.05 மணிக்குள் வைகை ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் நடக்கிறது. மே 13ம் தேதி தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் கொடுத்தல், இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம், மே 14ம் தேதி அதிகாலை மோகினி அவதாரத்தில் அழகர் காட்சியளித்தல் திருவிளையாடல் நடைபெறும்.





