
பஹல்காம் கொடூரத்திற்கு பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வோம் #IndusWatersTreaty என மத்திய அரசு அறிவித்துள்ளது. தண்ணீர தர மாட்டோம் என்பது இதன் பொருளல்ல.
“நீரை நிறுத்தினால் ரத்த ஆறு ஓடும்: என்கிற பொறுக்கித்தனமான பேச்சுக்குத் தான் “ஒரு சொட்டு நீர் கூடக் கிடையாது” என்கிற வார்த்தை பதிலடி. நம்மிடம் அவ்வளவு நீரைத் தேக்கும் அளவு உள்கட்டமைப்பு இல்லை. ஆனால் முன்பு போல கால இடைவெளியில் முறைப்படி நீர்ப் பகிர்வு நடக்காது. கொள்கை மாற்றம் என்ன என்பது அடுத்த சில வாரங்களில் தெரியும்.
இந்திய அரசுக்கு மனிதாபிமானம் இல்லை என்று வாதிடும் (ஞாபக மறதி) சகாக்களுக்கு….
● கோவிட் தடுப்பூசிகளை உலகம் முழுவதும் உள்ள 45 நாடுகளுக்கு அனுப்பியது நமது அரசு. திட்டத்தின் பெயர் #VaccineMaitri
● முற்போக்கு பேசும் நண்பர்கள் ஆதரவு பெற்ற முன்னாள் அமெரிக்க அதிபர் திரு. ஜோ பைடன் அப்போது என்ன செய்தார் தெரியுமா ? தேவைக்கு அதிகமாக இருந்த தடுப்பூசிகளை யாருக்கும் கொடுக்க மாட்டேன் என்று நிறுத்தி விட்டார்.
● மருத்துவ விசா நீடிக்கவில்லை. நாளை வரை (ஏப்ரல் 29) காலக் கெடு ஏற்கனவே கொடுத்துள்ளார்கள். பாகிஸ்தான் பிரஜைகள் என்றாலும் கருணை கூர்ந்து குறைந்த ஆவணங்களுடன், விரைவாக விசா அனுமதி இதுவரை வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிரண்டு குடும்பங்கள் பாதிக்கப்பட்டாலும் அதனையும் அரசு பரீசிலிக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.
● ஒரு வேளை சிகிச்சை தாமதம் ஆனால் பாதிக்கப்பட்ட நபருக்கு வேண்டிய மருத்துவ ஆலோசனைகள், பரிந்துரைகளை டாக்டர்கள் வழங்குவார்கள். ஊடகங்கள் அல்ல.
● இந்தியா தனது 100 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட 12 வருடம் ஆகும் என்று (இன்று நியாயம் பேசும்) போலி முற்போக்கு ஊடகங்கள் மிகக் கேவலமான பொய்யை எழுதின. இன்று வரை தங்களின் தவறுகளுக்கு அவை மன்னிப்பு கேட்டதேயில்லை. அதனால் இந்த ஊடக அழிச்சாட்டியங்கள் “ஆடு நனைகிறது என்று ஓநாய் அழும் கதை”. கண்டு கொள்ள அவசியம் இல்லை.
● காஷ்மீர் மாநில மக்களுக்கு மட்டும் ஹூரியத் மாநாடு கட்சித் தலைவர்கள் பரிந்துரையில் பாகிஸ்தானில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு சிறப்பு அனுமதி, கட்டணச் சலுகை போன்றவை விஷம் தோய்ந்த கத்திகள்.
● இந்தியாவில் ரூ.80 இலட்சம் செலவாகும் மருத்துவப் படிப்பு, வங்கதேசத்தில் ரூ.40 இலட்சம். பாக்.கில் ரூ.20 இலட்சத்திற்கு வழங்கப்பட்டது. அத்தனையும் மோசடி. தரமான கல்வியும், மருத்துவ வசதியும் இல்லாத நாடும், நாட்டு மக்களும் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் நாட்டின் மீது துரோகம் செய்யத் துணியக் கூடாது.
● 2019 சட்டப்பிரிவு நீக்கத்திற்குப் பின் இவை அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. இதில் உள்ள முறைகேடுகள், கல்விக்கான பணம் பயங்கரவாதிகள் பயிற்சிக்கு உதவியது என்று பல கோணங்கள் உள்ளன. தேடிப் படியுங்கள்.
● இது தான் சாக்கு என்று “ராம்” படத்தில் கஞ்சா கருப்பு மேல் பாவாடை காணாமல் போன கேஸ் போடுவது போல வேறு சில அதிமேதாவிகள் “மணிப்பூர் வன்முறை”, “கோவிட் மரணங்கள்”, “சிறப்பு அந்தஸ்து நீக்கம் தோல்வி” என்று அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள்.
● #AFSPA குறித்து இவர்கள் விவாதிப்பார்களா ? யார் ஆட்சியில் ஆயுதப்படை சிறப்புச் சட்டம் விரிவுபடுத்தப்பட்டது என்ற வரலாறு அறிவார்களா ? காஷ்மீர், பஞ்சாப், அசாம், மேகாலயா, மிசோரம், நாகாலந்து என்று பறந்து விரிந்து கிடந்த சிறப்பு ஆயுதச் சட்டத்தின் இன்றைய நிலை என்ன ? வட கிழக்கில் இப்போது நிலவும் அமைதிக்கான காரணம் யார் ?
● 2013 இல் திரு.சந்தோஷ் ஹெக்டே தலைமையிலான ஆணையம் மணிப்பூர் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டது நினைவில் உள்ளதா ? அப்போது முதல் பாஜக தான் ஆட்சியில் உள்ளதா ?
● நாகலாந்து மக்கள் தனி நாடு கேட்ட போது இராணுவம் ஏன் வந்தது ? அமைதிப் பேச்சுவார்த்தை ஏன் வெற்றி பெறவில்லை ? மேற்கு வங்க மாரீச்சபி படுகொலைகள் நடந்ததற்கு யார் பொறுப்பு ? சந்தோஷ் காளி, முர்ஷிதாபாத் கலவரங்களையும் சேர்த்து எழுதுவது தானே…. கொடுமை.
- சக்கரவர்த்தி மாரியப்பன்





