வேலிக்குள் இருக்கும் வரை விபரீதம் இல்லை! அஞ்சாத மான்!

Published:

deer 2 - 2026

காட்டில் இருக்கும் வேட்டை விலங்குகளின் உணவு என்றால் அது மான் தான். அவை எங்கிருக்கின்றன என்பதை தேடித் தேடி பெரிய விலங்குகள் வேட்டையாடும்.

சிறுத்தை, புலி மற்றும் சிங்கத்தின் பிராதன உணவே மான் என்றால் மிகையில்லை. ஏனென்றால், வனப்பகுதியில் அதிகமாக மான் தான் இருக்கும். மற்ற விலங்குகளையும் சிறுத்தை வேட்டையாடும் என்றாலும், எளிதான இலக்கு மான் தான்.!

துரத்திப் பிடிப்பதற்கு சிறுத்தைக்கு ஏதுவாக இருக்கும். மான்கள் வேகமாக ஓடக்கூடியவை என்றாலும், புலிப்பாய்ச்சலுக்கு முன்பு தப்பிக்க இயலாது.

மானைவிட இருமடங்கு வேகத்தில் புலி மற்றும் சிறுத்தை ஓடி வரும். அதனால், மான்கள் தப்பிக்க வேண்டும் என்றால், வேகமாக ஓடுவதுடன் லாவகமாக சிந்தித்து துரத்தி வரும் புலியை திசை திருப்பினால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும்.

உயிருக்கு உத்தரவாதம் வேண்டும் நேரங்களில் மான்கள் இப்படி லாவகமாக செயல்படுவதை கூட நீங்கள் பார்த்திருக்க முடியும்.

ஆனால், இப்போது வைரலாகியிருக்கும் வீடியோவில் மான், சிறுத்தை வருவதைப் பார்த்து துளிகூட அஞ்சவில்லை. சிறுத்தை வேட்டையாட வருகிறது என தெரிந்தும் மான் ஜாலியாக புல் மேய்ந்து கொண்டிருக்கிறது.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

அப்போது, அருகில் வரும் சிறுத்தை, மானை வேட்டையாட முற்படுகிறது. இருந்தபோதும் அதனால் முடியவில்லை. ஏனென்றால், மானுக்கு முன்பு மிகப்பெரிய கம்பிவேலி இருக்கிறது.

அதனை சிறுத்தை கவனிக்கவில்லை. வேலி இருக்கும் தைரியத்தில் மான் எந்தவித சலனமும்இன்றி இருக்கிறது. மறுபுறம் மானை வேட்டையாட முடியாத ஏமாற்றத்தில் சிறுத்தை திரும்பிச் செல்கிறது. இந்த வீடியோ காண்போரை ரசிக்க வைத்துள்ளது.

Related articles

Recent articles

spot_img