திருமணம் முடிந்த இரண்டு நாட்களில் புதுமணப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தை அடுத்த வடுகன்தாங்கல் பகுதியில் வசித்து வருபவர் கண்ணப்பன். இவரது மகன் சங்கர். 45 வயதாகும் சங்கர் பெட்டி கடை நடத்திவரும் நிலையில், அதே பகுதியை சேர்ந்த சாந்தகுமார் என்பவரின் மகள் மகாலட்சுமி (20) என்பவருடன் கடந்த மாதம் 29 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது.
ஊரடங்கு என்பதால் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்து மகாலட்சுமி தனது கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். கணவன் வீட்டில் 2 நாட்கள் தங்கியிருந்த மகாலட்சுமி அடுத்த நாள் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். மகாலட்சுமி வீட்டில் தூக்கில் தொங்குவதை பார்த்த சங்கரின் குடும்பத்தினர் இதுகுறித்து மகாலட்சுமியின் பெற்றோருக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
இதனை அடுத்து மகாலட்சுமியின் சகோதரி விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். தன்னைவிட 25 வயது அதிகமான ஒருத்தருக்கு பெற்றோர் வலுக்கட்டாயமாக திருமணம் செய்துவைத்ததால் மகாலட்சுமி தற்கொலை செய்துக்கொண்டாரா அல்லது வேறு ஏதுனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.