நீட் தேர்வுக்கு ஏராளமானோர் விண்ணப்பம்: முடங்கிய இணையதளம்

இந்தியா கல்வி சற்றுமுன் தமிழகம்

மே 6ல் நீட் தேர்வு என்று அறிவிக்கப் பட்டுள்ளது. மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு மே 6ம் தேதி நடக்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

தேர்வுக்காக இன்று(பிப்.,8) முதல் மார்ச் 9 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.

விண்ணப்ப கட்டணம், பொதுப்பிரிவு மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 1,400 ரூபாய் எனவும், எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 750 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு கட்டணத்தை செலுத்த கடைசி நாள் மார்ச் 10. இந்நிலையில் நீட் நுழைவு தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என கூறிய சில மணி நேரங்களில் சி.பி.எஸ்.இ., இணையதளம் முடங்கியது.

website: https://cbseneet.nic.in

Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam