சென்னை விமான நிலையத்தில் விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு!

Published:

சென்னை:

ஒரே நேரத்தில் இரு வேறு விமானங்களில் ஏற்பட்ட கோளாறால் சென்னை விமான நிலைய சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இரு விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அவசரமாக தரையிறங்கியதால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் சரக்கு விமானம் எரிபொருள் பற்றாக்குறையால் அவசரமாக தரையிறக்கப் பட்டது. ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமானத்தின் டயர் வெடித்ததால் தரையிறக்கப்பட்டது.

ஸ்பைஸ்ஜெட் விமானம் 152 பயணிகளுடன் தரையிரங்கும் போது டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது பரபரப்பைக் கிளப்பிய அதே நேரத்தில் வெளிநாடு செல்லும் சரக்கு விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் இயந்திர கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டது.

இந்த சம்பவங்களால் விமான ஓடு தளத்தை பயன்படுத்த இயலாத நிலை உருவானது. உடனடியாக 2வது ஓடு தளத்தை தயார்படுத்த விமான நிலைய நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இது குறித்து விமான நிலைய இயக்குநர் கூறிய போது சிறிது நேரத்தில் இயல்பு நிலை திரும்பும் என தெரிவித்தார். அதன்படி இரவு நேரத்தில் இயல்பு நிலை திரும்பியது..

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

Related articles

Recent articles

spot_img