பாரதியார் பல்கலை. தொலைதூர கல்வி இயக்குனர் லஞ்ச புகாரில் நீக்கம்

கல்வி கோவை சற்றுமுன் தமிழகம்

கோயமுத்தூர்:

லஞ்ச புகாரில், பாரதியார் பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி இயக்குனர் மதிவாணன் பணி நீக்கம் செய்யப் பட்டார். அவருக்கு பதிலாக, புதிய இயக்குனராக புள்ளியல் துறை பேராசிரியர் கே.கே.சுரேஷ் நியமனம் செய்யப் பட்டார்.

முன்னதாக, கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் அறையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். கோவை பாரதியார் பல்கலையைச் சுற்றி பல சோதனைகள், கருத்துகள் இப்போது சுற்றி வரத் தொடங்கியுள்ளன.

கடந்த வாரம், பாரதியார் பல்கலை. துணைவேந்தராக இருந்த கணபதி, ஊழல் புகாரில் கைது செய்யப் பட்டார். அவரது ஜாமின் மனு இன்று தள்ளுபடி செய்யப் பட்டது. இதற்கான உத்தரவை

கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்தது.
லஞ்சம் வாங்கியதாக கைதான கணபதி ஜாமின் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 6 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.