மௌன விரதத்தை முடித்துக் கொண்ட சசிகலா!

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப் பட்டுள்ள சசிகலா, இன்று தனது மௌன விரதத்தை முடித்துக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பெங்களூரு:

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப் பட்டுள்ள சசிகலா, இன்று தனது மௌன விரதத்தை முடித்துக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப் பட்டுள்ளார் சசிகலா. அவர் மீது பல குற்றச்சாட்டுகள் சிறைத்துறையால் முன்வைக்கப் பட்டுள்ளன.

இதனிடையே, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசால் அமைக்கப் பட்டுள்ள நீதிபதி ஆறுமுக சாமி ஆணையம், சசிகலாவையும் விசாரிக்க முயன்றது. ஆனால், சசிகலா அதற்கு முன்னதாகவே, தாம் மௌன விரதம் இருப்பதாகக் கூறியதாக, அவரை சிறையில் சென்று சந்தித்த டிடிவி தினகரன், கூறியிருந்தார். அதன் பின்னர், ஆர்.கே.நகர் தேர்தல், தேர்தல் வெற்றி, சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப் பட்டது, சசிகலா தொடர்புடையவர்களின் வீடுகளில் நடத்தப் பட்ட வருமான வரித்துறையினர் சோதனைகள் என பல சம்பவங்கள் நடந்த போதும், சசிகலா மௌன விரதத்தில் இருப்பதாகவே, டிடிவி தினகரனால் வெளியுலகுக்குச் சொல்லப் பட்டது.

இந்நிலையில்,
பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவிக்கும் சசிகலா மவுன விரதத்தை முடித்து கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சிறையில் பல நாட்களாக கடைப்பிடித்து வந்த மவுன விரதத்தை சசிகலா முடித்து கொண்டார்.