கர்நாடகாவில் திருமண விழாவிற்கு சென்ற ஜீப் சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் மணமகளின் தாய் உட்பட 9 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தார்வார் அருகே நிகதி பகுதியை சேர்ந்தவர் நீலவ்வா( 60). இவரது மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதற்காக நிகதி பகுதியை சேர்ந்த 21 பேர் ஒரு ஜீப்பில் சென்றனர்.
அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையோர உள்ள மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் ஜீப் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மணமகளின் தாய் நீலவ்வா, ஷில்பா மற்றும் ஹரீஷ் ஆகியோர் உள்பட 7 சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்து உள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தார்வார் புறநகர் போலீசார் வந்து ஆய்வு செய்தனர். பின்னர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெனகனஹள்ளியைச் சேர்ந்த 21 பேர் மனசுரா கிராமத்தில் நடைபெற்ற திருமண நிச்சயத்திற்கு சென்று திரும்பும் போது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. நள்ளிரவில் படா என்ற இடத்தின் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர மரத்தில் மோதியது. அதில் நிகழ்விடத்திலேயே 7 பேரும், மருத்துவமனையில் இருவரும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 11 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மூன்று பேர் ஹூபலியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இந்த விபத்தில் அனன்யா(14), மகேஷ்வரா(11), ஷில்பா(34), நீலவ்வா(60), மதுஸ்ரீ(20) மற்றும் ஷம்புலிங்கையா(35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மாவட்ட கண்காணிப்பாளர் ஓபி போலீஸ் கிருஷ்ணகாந்த் .சம்பவ இடத்திற்கு உடனடியாக அவர் நேரில் சென்று பார்வையிட்டார்.இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


