தெலங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டத்தில் மின்சார பைக் சார்ஜ் செய்துகொண்டிருந்தபோது தீப்பிடித்து எரிந்ததில் வீடு எரிந்து நாசமான சம்பவம் நடந்தது.இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கா மண்டலத்தின் சிகோடா கிராமத்தில் இந்த விபத்து நடைபெற்றது. இதனால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் விலை உயர்வால், எலக்ரிக் பைக்கை வாங்கியுள்ளார் லட்சுமி நாராயணன். அதை தனது பக்கத்து வீட்டில் நிறுத்திவிட்டு, படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு சார்ஜ் போட்டுள்ளார்.
திடீரென வெடி சத்தம் கேட்டு எழுந்து வெளியே வந்த அவர், பக்கத்து வீட்டில் தீப்பிடித்து எரிவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். வெடித்ததையடுத்து பைக் தீப்பிடித்து எரிந்ததாகவும், சிறிது நேரத்தில் தீ வீடு முழுவதும் மளமளவெனப் பரவி சாம்பலானதாகவும் அவர் கூறினார்.
வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வீட்டின் உரிமையாளர் துர்க்கையா ஹைதராபாத்தில் வசிப்பதால், அவரது அனுமதியுடன் லட்சுமி நாராயணா தனது மின்சார வாகனத்தை சார்ஜ் செய்துள்ளார்.
பெட்ரோல் சேமிப்பதாக நினைத்து பல இடங்களில் இந்த அசம்பாவிதம்
சமீப காலமாக ஆங்காங்கே நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
