கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் பிப்.25 முதல் 4 நாட்கள் வேலைநிறுத்தம்

bank-strike புதுதில்லி: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் பிப்.25 முதல் 4 நாட்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளனர். இந்த 4 நாட்கள் வேலை நிறுத்தம் மிகவும் தீவிரமாக இருக்கும் என்றும், இதனால் வங்கியின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கும் என்றும் பொதுத்துறை வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் முன்கூட்டியே தெரிவித்துள்ளன. இருப்பினும், வங்கி சேவைகள் தடையின்றி இயன்ற அளவில் தொடர நடவடிக்கை எடுப்பதாகவும் வங்கிகள் தெரிவித்துள்ளன. மார்ச் 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேலைநிறுத்தத்தையும் சேர்த்து மொத்தம் 5 நாட்களுக்கு வங்கிகள் முடங்கும் அபாயம் உள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. இந்நிலையில், கூட்டமைப்பினருடன் நடந்த பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதால் கடந்த மாதம் 21-ந் தேதி முதல் 24-ந்தேதி வரை நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த வேலைநிறுத்தத்தை ஒத்திவைத்தது. இருப்பினும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப் படாததால், வரும் பிப்.25-ந் தேதி முதல் 4 நாட்களுக்கு இந்தியா முழுவதும் வேலைநிறுத்தம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளது. இந்தத் தகவலை இந்திய வங்கிகள் சங்கத்துக்கும், மத்திய நிதித்துறை அமைச்சகத்துக்கும் வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், மார்ச் 16-ம் தேதிக்குள் ஊதிய உயர்வு தொடர்பான உடன்பாடு ஏற்படவில்லை என்றால் மார்ச் 16-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய நேரிடும் என்றும் வங்கிகளின் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 18 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஹரிஜன ஆலயப்பிரவேச போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற தியாகி வைத்தியநாத ஐயர் பிறந்த தினத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

தமிழர்கள் ஒவ்வொருவரும் மார்தட்டிப் பெருமைப்பட வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது!

பஞ்சாங்கம் மே 17 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

Entertainment News

Popular Categories