பஞ்சாப்ப் ஜனவரி 5ல் பிரதமர் மோடி பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு உண்மைதான்..

mcms 1 - 2026

பஞ்சாப்பில் கடந்த ஜனவரி 5ம் தேதி பிரதமர் மோடி பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது உண்மைதான் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் கடந்த ஜனவரி 5ல் நாட்களுக்கு முன் நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பதிண்டா விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி காரில் சென்றார். அப்போது பயண வழியில் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், அவரால் பயணத்தைத் தொடர முடியவில்லை. நிகழ்ச்சியில் பங்கேற்காமல் அவர் டெல்லி திரும்பினார். பிரதமரின் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒன்றிய உள்துறை அமைச்சகமும், மாநில அரசும் தனித்தனியாக குழுக்களை அமைத்து விசாரணையை தொடங்கின. இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்கக் கோரி ‘லாயர்ஸ் வாய்ஸ்’ என்ற அமைப்பு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூா்யகாந்த், ஹிமா கோலி ஆகியோரைக் கொண்ட அமர்வால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்றம் நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.

இந்த குழுவில் பஞ்சாப் உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர், பஞ்சாப் டிஜிபி, சண்டிகர் டிஜிபி மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஜெனரல் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

முழு விசாரணை அறிக்கையும் பிரமாண பத்திரமாக இந்த குழு நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். அதுவரை ஒன்றிய, மாநில அரசுகள் முன்னதாக நியமித்த குழுக்கள் தங்களது விசாரணையை மேற்கொள்ள கூடாது. இதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடி பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஜனவரி 5ல் மோசமான வானிலையால் பிரதமர் ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்து விட்டு சாலை மார்க்கமாக சென்றார். பயணத்தின் போது சில போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டதால் அவர் 20 நிமிடம் காரிலேயே காத்திருக்க நேர்ந்தது. பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது உண்மைதான். பெரோஸ்பூர் காவல் உதவி கண்காணிப்பாளர் தனது பணியை சரியாகச் செய்யவில்லை. சட்டம் ஒழுங்கை முறையாகப் பராமரிக்கவில்லை என்று அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories