மார்ச் 13ல் இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி

narendramodi புது தில்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறைப் பயணமாக வரும் மார்ச்- 13 ஆம் தேதி இலங்கைக்குச் செல்கிறார். இந்தத் தகவலை இலங்கை அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன வியாழன் அன்று அறிவித்தார். இலங்கை பயணத்தை முடித்துக்கொண்டு மார்ச்15 ஆம் தேதி மோடி இந்தியா திரும்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர், அதாவது 27 ஆண்டுகளுக்குப் பின்னர் அரசு முறைப் பயணமாக அண்டை நாடான இலங்கை செல்லும் இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி இருப்பார். காரணம், 1987 ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைக்கு அரசு முறைப் பயணமாகச் சென்றபோது, அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவுடன் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அந்தப் பயணத்தின் முடிவில் அரசு ராணுவ மரியாதையை ஏற்றுக் கொண்டிருந்தபோது, இலங்கை ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியின் பின்புறக் கட்டையால் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் அப்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் இந்தியப் பிரதமர்கள் எவரும் அரசு முறைப் பயணமாக இலங்கைக்குச் செல்லவில்லை. ராஜீவ் காந்திக்குப் பிறகு இந்தியப் பிரதமர்கள் சிலர் இலங்கைக்குச் சென்றிருந்தாலும் அவர்கள் தங்கள் தனிப்பட்ட பயணமாகத்தான் சென்றிருக்கிறார்களே தவிர, அரசு முறைப் பயணமாக அவை அமையவில்லை. குறிப்பாக, இலங்கையில் நடந்த சர்வதேச மாநாடுகளில் கலந்து கொள்வதற்கான பயணங்களாகவே அவை அமைந்திருந்தன. கடந்த 2008-இல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கொழும்பில் நடந்த சார்க் மாநாட்டில் கலந்துகொண்டு சார்க் அமைப்பின் தலைமைப் பொறுப்பை அப்போதைய இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்சவிடம் அளித்தார். இருப்பினும், பின்னர் வந்த 2013 காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சில அரசியல் பிரச்னைகளால் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், இலங்கையின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்ரிபால சிறீசேன, பதவியேற்ற பின்னர் தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வந்தார். அப்போது, இந்தியா இலங்கைக்கு இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன் பின்னர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு வருமாறு அவர் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாக இந்தியா தெரிவித்தது. இந்நிலையில், வரும் மார்ச் 13ம் தேதி மோடி இலங்கை செல்வதாக அவரது பயணத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories