
- குப்த பேரரசு மற்றும் அவர்களின் சாதனைகள் பற்றிய குறிப்பு புத்தகம் எதுவும் இல்லை என்று அமித் ஷா கூறினார்
- இந்தியா சுதந்திரம் பெற்றுள்ளதால், இந்தியா தனது சொந்த வரலாற்றை எழுத முடியும் என்றார் அமித் ஷா.
புதுதில்லியில் நடந்த ‘மஹாராணா: சஹஸ்த்ர வர்ஷ கா தர்ம யுத்த’ புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது,
பாண்டியர்கள், சோழர்கள், மௌரியர்கள், குப்தர்கள் மற்றும் அஹோம்கள் போன்ற பேரரசுகளின் ஆட்சிகளை முற்றிலுமாகப் புறக்கணித்த அதே வேளையில், இந்தியாவின் வரலாற்றை பதிவு செய்யும் போது வரலாற்றாசிரியர்கள் எப்போதும் முகலாயர்களுக்கே அதிக முக்கியத்துவம் அளித்து வந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
புதுதில்லியில் நடைபெற்ற ‘மஹாராணா: சஹஸ்த்ர வர்ஷ கா தர்ம யுத்தம்’ என்ற சரித்திர புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சியில்தான் அமித் ஷா இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
இந்திய வரலாற்றாசிரியர்களின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர், “நான் வரலாற்றாசிரியர்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நம்மிடம் பல பேரரசுகள் உள்ளன, ஆனால் வரலாற்றாசிரியர்கள் முகலாயர்களை மட்டுமே மையமாகக் கொண்டு பெரும்பாலும் அவர்களைப் பற்றியே எழுதியுள்ளனர். பாண்டியப் பேரரசு 800 ஆண்டுகள் ஆட்சி செய்தது. அஹோம் பேரரசு அஸ்ஸாமை 650 ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள். அவர்கள் (அஹோம்ஸ்) பக்தியார் கில்ஜி, ஔரங்கசீப் ஆகியோரையும் தோற்கடித்து அசாமை தனித்த இறையாண்மையுடன் வைத்திருந்தனர். பல்லவப் பேரரசு 600 ஆண்டுகள் ஆட்சி செய்தது. சோழர்கள் 600 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.
மௌரியர்கள் நாடு முழுவதையும் – ஆப்கானிஸ்தான் முதல் இலங்கை வரை 550 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். சத்வாகனர்கள் 500 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். குப்தர்கள் 400 ஆண்டுகள் ஆட்சி செய்தனர் மற்றும் (குப்தப் பேரரசர்) சமுத்திரகுப்தன் முதல் முறையாக ஒருங்கிணைந்த இந்தியாவைக் கண்டு, ஒரு பேரரசை நிறுவினார். முழு நாடு. ஒரே நாடு. ஆனால் அவர்கள் பற்றிய குறிப்புப் புத்தகம் இல்லை,” என்று கூறினார் அமித் ஷா.
இந்தப் பேரரசுகளைப் பற்றி குறிப்புப் புத்தகங்கள் எழுதப்பட வேண்டும் என்றும், அவை எழுதப்பட்டால், “தவறாக நாம் நம்பும் வரலாறு படிப்படியாக மறைந்து உண்மை வெளிவரும்” என்றார்.
இதற்காக பலர் மூலம் பணிகளைத் தொடங்க வேண்டிய நிலை உள்ளது என்றார். “கருத்துகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நமது புகழ்பெற்ற வரலாற்றை பொதுமக்கள் முன் வைக்க வேண்டும். நாம் பெரிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது, பொய்யின் முயற்சி தானாகவே சுருங்கிவிடும். எனவே, நமது முயற்சிகளை பெரிதாக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்,” என்றார்.
வரலாறு வெற்றி அல்லது தோல்வியின் அடிப்படையில் எழுதப்படுவதில்லை, ஆனால் எந்தவொரு நிகழ்வின் முடிவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது என்று ஷா கூறினார். அரசு மற்றும் புத்தகங்களின் அடிப்படையில் வரலாறு படைக்கப்படுவதில்லை, உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது என்றார். “உண்மையை எழுதுவதை யாராலும் தடுக்க முடியாது. நாம் இப்போது சுதந்திரமாக இருக்கிறோம். நம் வரலாற்றை நாமே எழுத முடியும்” என்று அவர் கூறினார்.
சிலர் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வரலாற்றை எழுதியுள்ளனர் என்பது உண்மை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். “ஆனால் இந்தியா ஏமாற்றமே எப்போதும் வாழ்ந்துகொண்டிருக்க முடியாத ஒரு நாடு”. என்றார்.
“இதற்கு பல தசாப்தங்கள், 50 ஆண்டுகள் அல்லது நூறு ஆண்டுகள் ஆகலாம், ஆனால் இறுதியில், அது உண்மையாக ஒருநாள் வெளிப்பட்டு வெற்றியாக முடியும்,” என்று அவர் கூறினார். சில வரலாற்றாசிரியர்கள் சிறிய அளவில் சில புத்தகங்களை எழுதியுள்ளனர், ஆனால் முழு நாட்டினுடையதுமான வரலாற்றைப் பற்றிய எந்த ஒரு விரிவான பணியையும் யாரும் செய்யவில்லை; எனினும் வரையறுக்கப்பட்ட குறிப்புப் புத்தகங்கள் ஓரளவில் உள்ளன என்று அமித் ஷா கூறினார்.
அரசாங்கமும் முன்முயற்சிகளை மேற்கொள்கிறது, ஆனால் வரலாற்றை எழுதுவதற்கு அரசாங்கம் முன்முயற்சி எடுக்கும்போது பல சிரமங்கள் ஏற்படுகின்றன என்றார். “சுதந்திரமான வரலாற்றாசிரியர்கள் வரலாற்றை எழுதும்போது, உண்மை மட்டுமே வருகிறது, அதனால்தான் நம் மக்கள் எந்தக் கருத்தையும் திணிக்காமல் உண்மைகளுடன் புத்தகங்களை எழுத வேண்டும்,” என்று அவர் கூறினார்.