IPL 2023: மீண்டு(ம்) வருகிறார் நாயகன் ரோஹித் சர்மா!

ipl 2023 matches - 2026
#image_title

ஐ.பி.எல் 2023 – 12ஆம் நாள் – 11.04.2023
ரோஹித் ஷர்மா – நாயகன் மீண்டும் வரார்

–முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் —

ஐ.பி.எல் 2023 தொடரின் 12ஆம் நாளான நேற்று மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையே டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் மும்பை அணி வென்றது. டெல்லி அணியை (19.4 ஓவரில் 172, வார்னர் 51, அக்சர் படேல் 54, மனீஷ் பாண்டே 26, ஜேசன் ப்ரண்டார்ஃப் 3/23, பியுஷ் சாவ்லா 3/22) மும்பை அணி (173/4, ரோஹித் ஷர்மா 65, திலக் வர்மா 41, இஷான் கிஷன் 31, முகேஷ் குமார் 2/30) 6 விக்கட்டு வித்தியாசத்தில் வென்றது.

போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார் ரோகித் சர்மா. இதனையடுத்து பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு டேவிட் வார்னர் மீண்டும் ஒருமுறை மந்தமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். மற்றொரு தொடக்க வீரரான ப்ருத்வி ஷா மீண்டும் ஒரு முறை சரியாக ஆடவில்லை. வரிசையாக ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் வார்னர் நிதானமாக விளையாடி அரைசதம் கண்டார்.

ஆறாவது விக்கெட்டிற்கு அக்சர் பட்டேல் வார்னருடன் இணைந்தார். இந்த ஜோடி 67 ரன்கள் குவித்தது. 25 பந்துகளில் 54 ரன்கள் அடித்து அக்சர் பட்டேல் ஆட்டமிழந்தார். டேவிட் வார்னர் 47 பந்துகளுக்கு 51 ரன்கள் அடித்து அவுட் ஆனார். 19.4 ஓவர்களில் 172 ரன்கள் அடித்து டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆல் அவுட் ஆனது.

இந்த மைதானத்தில் 173 ரன்கள் இலக்கு எட்டக்கூடியது இலக்காகும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் (26 பந்துகளில் 31 ரன்) மற்றும் ரோகித் சர்மா (45 பந்துகளில் 65 ரன், 6 ஃபோர், 4 சிக்சர்) இருவரும் களமிறங்கினர். மிகவும் நிதானமாக விளையாடி இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 71 ரன்கள் சேர்த்தது.

இஷான் கிஷன் 31 ரன்கள் அடித்து அவுட் ஆனார். அடுத்ததாக உள்ளே வந்த திலக் வர்மா (29 பந்துகளில் 41 ரன்) தனது சிறந்த பார்மை இந்த போட்டியிலும் தொடர்ந்தார். ரோகித் சர்மாவுடன் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 68 ரன்கள் சேர்க்க உதவினார். 15.5ஆவது ஓவரில் திலக் வர்மா ஆட்டமிழக்க அடுத்துவந்த சூரியக்குமார் யாதவ் முதல் பந்தியிலேயே பொன்முட்டையிடும் வாத்தாக மீண்டும் ஒருமுறை ஏமாற்றினார். மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மாவும் 16.5ஆவது ஓவரில் ஆட்டமிழக்க மும்பை அணிக்கு கடைசி மூன்று ஓவர்களில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் 19ஆவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்து, அந்த ஓவரில் 15 ரன்கள் குவிக்க உதவினார் டிம் டேவிட்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு ஐந்து ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. மிகவும் கட்டுக்கோப்பாக வீசிய ஆன்ட்ரிக் நார்க்கியா, கடைசி ஒரு பந்தில் இரண்டு ரன்கள் மட்டுமே தேவை என்று நிலைக்கு கொண்டு வந்தார். அப்போது டெல்லி வீரர்கள் பீல்டிங்கில் செய்த சில தவறால், டிம் டேவிட் மற்றும் கேமரூன் கிரீன் ஜோடி இரண்டு ரன்கள் ஓடி வெற்றியை உறுதி செய்தனர். இறுதியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்தது. ரோஹித் ஷர்மா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories