தேஜஸ் போர் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி! புதிய பெருமை!

pm modi in tejas - 2026
#image_title

புதிய பெருமை: பிரதமர் மோடி

பாரதத்திலேயே உருவாக்கப்பட்ட உள்நாட்டு போர் விமானமான தேஜஸ் போர் விமானத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பறந்து சென்று ஆய்வு நடத்தினார்.

தேஜஸ் விமானத்தில் பயணம் செய்தது வெற்றிகரமாக முடிந்தது. இந்த அனுபவம் நம்பமுடியாத அளவிற்கு செழுமைப்படுத்தியது, நமது நாட்டின் பூர்வீக திறன்கள் மீதான எனது நம்பிக்கையை கணிசமாக உயர்த்தியது, மேலும் நமது தேசிய திறனைப் பற்றிய புதிய பெருமை மற்றும் நம்பிக்கையை எனக்கு அளித்தது என்று இந்த பறந்த பயண அனுபவம் பற்றி பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தை (எச்ஏஎல்) பார்வையிட்ட பிரதமர் மோடி, அங்கு தேஜஸ் போர் விமானத்தில் பயணம் செய்தார். இது புதிய அனுபவமாக இருந்ததாக அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல்., – ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம், நமது பாரத ராணுவத்துக்கு தேவையான தளவாடங்கள், இலகு ரக ஹெலிகாப்டர்கள், இலகு ரக போர் விமானங்கள் ஆகியவற்றை தயாரித்து வடிவமைத்து வருகிறது. இந்நிறுவனத்திடம் எஸ்.யூ., 30 எம்.கே. ஐ.,ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.

இது தொடர்பாக அங்கு நடைபெற்று வரும் உற்பத்தி மற்றும் வடிவமைப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய இன்று காலை பிரதமர் மோடி பெங்களூரு வந்தார். எச்ஏஎல் நிறுவனத்தின் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்த பிரதமர் மோடி, திடீரென தேஜஸ் போர் விமானத்தில் பறக்கத் தயாராகி, அதில் பயணம் மேற்கொண்டார்.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

இது தொடர்பான புகைப்படங்களையும் வீடியோவையும் வெளியிட்டு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். அதில் தேஜஸ் மூலம் புதிய பெருமை கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தபோது, இரட்டை இன்ஜின் கொண்ட பயிற்சி தேஜஸ் விமானத்தில் பிரதமர் மோடி பயணித்தார். தேஜஸ் போர் விமானம் கடந்த அக்.4ஆம் தேதி இந்திய விமானப்படையில் , மத்திய அமைச்சர் அஜய் பட் மற்றும் விமானப்படை தளபதி சவுத்ரி முன்னிலையில் இணைக்கப்பட்டது என்று தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories