spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்கூட்டணி 400க்கு மேல்! பாஜக., மட்டும் 370 இடங்களைப் பிடிக்கும்; மூன்றாவது முறையாக ஆட்சி: பிரதமர்...

கூட்டணி 400க்கு மேல்! பாஜக., மட்டும் 370 இடங்களைப் பிடிக்கும்; மூன்றாவது முறையாக ஆட்சி: பிரதமர் மோடி உறுதி!

narandram modi in parliament
- Advertisement -

நாட்டை மதத்தின் பெயரால் பிளவுபடுத்தும் காங்கிரஸ் கட்சி இனி நாடாளுமன்றத்தில் பார்வையாளர் மாடத்தில் தான் அமரும் நிலை ஏற்படும் என்று கடுமையாக விமர்சனம் செய்து பேசினார் பிரதமர் மோடி.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து பிப்.1ல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களவையில் பேசினார். அப்போது அவர் பேசியவை….

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய முதல் உரையை என்றும் நினைவில் வைத்திருப்போம். 75வது குடியரசு தினம், புதிய நாடாளுமன்றக் கட்டடம், செங்கோல் என இவை அனைத்தும் சுவாரஸ்யமாக இருந்தன. நாட்டின் சுயத் தன்மையுடன் செங்கோல் நம் பாரம்பரியத்தை வெளிப்படுத்தியிருக்கீறது.

10 ஆண்டுகளில் நாடு மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளது. அதையே குடியரசுத் தலைவர் உரை பிரதிபலிக்கிறது. தேர்தலில் போட்டியிடும் சக்தியே எதிர்க்கட்சிகளுக்கு இல்லை. அவர்கள் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை; அடுத்த தேர்தலிலும் எதிர்க்கட்சி வரிசையிலேயே இருப்பார்கள். நாடாளுமன்றத்துக்கு வெளியில் இருக்கவே எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. அவர்களின் விருப்பத்தை மக்கள் தேர்தல் மூலம் நிறைவேற்றுவார்கள்.

மதத்தின் பெயரால், சிறுபான்மையினர் பெயரால் எதிர்க்கட்சிகள் நாட்டை பிளவுப்படுத்துகின்றன; அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும். காங்கிரசின் செயல்பாடுகளால் அக்கட்சிக்கும், பிறகட்சிகளுக்கும், நாட்டிற்கும் இழப்பு.

கூட்டணிக் கட்சிகளின் திறமையை காங்கிரஸ் வீணடிக்கிறது. ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சி செயல்பட தவறிவிட்டது. எதிர்க் கட்சியில் சிலர் போட்டியிடவே தயங்குகின்றனர்.

ஒரு முகத்தை முன்னிலைப்படுத்த மீண்டும் மீண்டும் முயற்சிப்பதால் காங்கிரசை இழுத்து மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

குடும்ப அரசியல் செய்வதால் மக்களின் பிரச்னைகள் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவதில்லை. அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்ப்பதே காங்கிரசின் நோக்கம். நாடு வளர்ச்சி பாதையில் செல்வதாக மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டனர்; நாட்டுக்கு சிறந்த எதிர்க்கட்சி தேவை என்பதுதான் எப்போதும் என் கருத்து. ஆனால் எதிர்க்கட்சிகள் தங்கள் கடமையை செய்யத் தவறிவிட்டன.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வரலாம் ஆனால் ஒரே குடும்பம் கட்சி நடத்துவதுதான் குடும்ப அரசியல். காங்கிரஸில் ஒரு சிலரின் முக்கியத்துவம் குறையக் கூடாது என்பதற்காக இளைஞர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் முடிவுக் காலம் வந்துவிட்டது. இனி வரும் காலங்களில் காங்கிரஸ் பார்வையாளர் மாடத்தில் மட்டுமே அமரும் நிலை ஏற்படும். காங்கிரசின் மந்தமான செயல்பாடுகளுக்கு உலகத்தில் வேறு யாரும் போட்டியில்லை.

நாங்கள் பேசுவது எங்களின் சாதனைகள் அல்ல; நாட்டின் சாதனைகள். உலகளவில் பொருளாதாரத்தில் இந்தியா 11வது இடத்தை பிடித்ததாக 2014ல் தற்போதைய எதிர்க்கட்சி கொண்டாடியது.

ஆனால் தற்போது பொருளாதாரத்தில் 5வது இட்ததிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளோம். 3வது முறையாக எனது தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றதும் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்பது எனது வாக்குறுதி.

உலகின் நலனுக்கு இந்தியா பாடுபடுகிறது என்பதை ஜி20 மாநாட்டில் பங்கேற்ற உலக தலைவர்கள் புரிந்து கொண்டனர். 4.8 கோடி ஏழை மக்களுக்கு வீடு கட்டி கொடுத்துள்ளோம். 17 கோடி மக்களுக்கு சமையல் காஸ் இணைப்பு வழங்கியுள்ளோம். மத்திய பாஜக., அரசு பெரிய குறிக்கோள்களுடன் கடினமாக உழைக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்ற 100 ஆண்டுகள் பிடித்திருக்கும்.

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கூட்டணி வியூகம் சிதறிவிட்டது. இண்டியா கூட்டணி உடைந்து விட்டது எனக் கருதியதால் தான் மம்தா தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தார். காங்கிரஸ் ஒரே குடும்பத்தை நம்பியுள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கே காங்கிரஸ் மீது நம்பிக்கை இல்லாதபோது மக்கள் எப்படி நம்புவார்கள்? கடவுள் ராமர் தமது வீட்டில் மீண்டும் வீற்றுள்ளதை தேசமே கொண்டாடுகிறது.

காஷ்மீர் முதல் குமரி வரை பாஜக,, என்ன சாதித்துள்ளது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். மகளிர் சக்தியை உணர்ந்து பாஜக., திட்டங்களை வகுத்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் நிச்சயம் வெற்றிபெறும்; அதில் பாஜக., மட்டும் 370 தொகுதிகளை வெல்லும்.

பாஜக., மீண்டும் ஆட்சி அமைத்து ஆயிரம் ஆண்டுக்கான திட்டங்களுக்கு அடித்தளம் அமைக்கும். ஏழைகளுக்குத் தேவையான வாய்ப்புகள், சாதனங்களைத் தந்தால் அவர்கள் தங்கள் ஏழ்மையைத் தோற்கடிப்பார்கள்.

நாட்டின் எல்லைப் பகுதி மக்களுக்கும் அரசின் திட்டங்கள் முழுமையாகச் சென்றுள்ளன. ஏழைகளின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி; பாஜக., அரசு வளர்ச்சி ஒன்றையே தாரக மந்திரமாகக் கொண்டுள்ளது.

ஓபிசி தலைவர்களை காங்கிரஸ் அவமதித்துள்ளது. தேசிய ஆலோசனைக் குழுவில் காங்கிரஸ் ஆட்சியில் எத்தனை பேர் ஓபிசி பிரிவினர் இருந்தனர்?

அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாஜக்அ., ஆட்சியில் 3 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக உயர்ந்துள்ளனர். பெண்களுக்கு முழு முக்கியத்துவம் கொடுக்கும் காலம் வந்துவிட்டது.

பாஜக., ஆட்சிக் காலத்தில் ரூ. 1லட்சம் கோடியை அமலாக்கத்துறை கைப்பற்றியது. ஆனால் இதற்கு முன் காங்கிரஸ் ஆட்சி ரூ.5000 கோடி தான் அமலாக்கத்துறை கைப்பறியது. வறுமையை ஒழிக்க பா.ஜ, அரசு எடுத்து முயற்சியின் பயனாக 25 கோடி பேர் வறுமை கோட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இவ்வாறு பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசினார். அவரது உரையை அடுத்து எதிர்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் குரல் ஒட்டெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேறியது.

பிரதமர் மோடி பேசியவற்றில் இருந்து சில துளிகள்….

  • இனிவரும் காலத்தில், நாடாளுமன்றத்தின் பார்வையாளர் மாடத்தில் மட்டுமே காங்கிரஸ் கட்சியினர் அமரும் நிலை ஏற்படும்
  • குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கும்போது பிரதமர் மோடி கடும் விமர்சனம்
  • ஒரு குடும்பத்தின் அரசியல் காணாமல் போய்விட்டது.
  • குடும்ப அரசியல் செய்வதால் மக்களின் தேவை எதிர்க்கட்சிகளின் கண்களுக்கு தெரியவில்லை.
  • ஜனநாயகத்துக்கு குடும்ப அரசியல் உகந்தது இல்லை.
  • காங்கிரஸின் செயல்பாடுகள் காங்கிரஸுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும், நாட்டிற்கும் பெரும் இழப்பு
  • இளம் எம்.பிக்களின் சக்தியை காங்கிரஸ் வீணடிக்கிறது.
  • எதிர்க்கட்சிகளுக்கு பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள் என யாரும் சிறுபான்மையினராக தெரியவில்லை
    ஒரே குடும்பத்தை சேர்ந்தோர் அரசியலுக்கு வரலாம், ஒரே குடும்பம் கட்சி நடத்துவதுதான் குடும்ப அரசியல்.
  • 3வது பொருளாதார நாடாக இந்தியா மாறும், இது மோடியின் கியாரண்டி.
  • வந்தே பாரத், புதிய நாடாளுமன்றம், மேக் இன் இந்தியா நாட்டின் சாதனைகள்.
  • அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்ப்பதே காங்கிரசின் நோக்கமாக இருக்கிறது
  • இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகள் கவனித்து கொண்டு இருக்கின்றன.
  • இந்தியாவின் GDP 11-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது; விரைவில் 3-வது இடத்திற்கு இந்தியா முன்னேறும்.
  • உலகின் நலனுக்காக இந்திய பாடுபடுவதை G-20 மாநாடு மூலம் உலக நாடுகள் புரிந்து கொண்டுள்ளன.
  • பாஜக-வின் 3-வது முறை ஆட்சி அமைக்கும் போது இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து இருக்கும்.
  • பாஜக செய்துள்ள சாதனைகளை காங்கிரஸ் செய்து முடிக்க 100 ஆண்டுகள் தேவைப்படும்.
  • அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்ப்பது காங்கிரஸின் நோக்கமாக இருக்கிறது
  • கடந்த 10 ஆண்டுகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்துள்ளது.
  • எப்போது எல்லாம் காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் விலைவாசி உயர்வும் வருகிறது.
  • முத்ரா திட்டத்தின் மூலம் ஏராளமான தொழில் முனைவோர்கள் உருவாகியுள்ளனர்.
  • முன்னாள் பிரதமர் நேருவின் ஆட்சிகாலங்களில் விலைவாசிகள் உயர்ந்து கொண்டே சென்றன.
  • முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி Emergencyயை அமல்படுத்திய காலத்தில் 30% விலைவாசி உயர்வு ஏற்பட்டது.
  • விவசாயிகளுக்கு எந்த உரிமையும் வழங்காமல் காங்கிரஸ் வைத்து இருந்தது.
  • டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய நாடாக இடம் பிடித்துள்ளது.
  • இளைஞர்களின் வளர்ச்சிக்காக பாஜக அரசு போல வேறுயாரும் திட்டங்கள் கொண்டு வந்தது இல்லை.
  • இந்தியாவில் பெண்களுக்கு இடமில்லாத எந்த துறையும் இன்று இல்லை.
  • பெண்களின் சக்தியை இந்தியா முழுமையாக பயன்படுத்துகிறது.
  • முன்பு பெண் குழந்தைகள் பிறப்பு விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது; இன்று அந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
  • அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காலம் வந்து விட்டது-பிரதமர் நரேந்திர மோடி.
  • இந்தியர்களை பற்றி முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோரின் கருத்து உயர்வானதாக இருத்ததில்லை.
  • பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மக்களுக்காக கொண்டு வந்து இந்திய நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறோம்.
  • பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையால் 370 சட்டப்பிரிவை முடிவுக்கு கொண்டு வந்தோம்.
  • இந்திய மக்கள் முன்பை விட பாஜகவிற்கு அதிக ஆதரவு கரம் கொடுக்கிறார்கள்.
  • பாஜக ஆட்சிக்கு வந்த பிறகே பள்ளத்தில் இருந்த பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தினோம்.
  • காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக செய்த திட்டங்களை மக்கள் உணர்ந்துள்ளனர்
  • 4.8 கோடி ஏழை மக்களுக்கு வீடுகளும், 17 கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு கொடுத்துள்ளோம்.
  • வரும் தேர்தலில் என்டிஏ கூட்டணிக்கு 400 இடங்களுக்கு மேல் கிடைக்கும்
  • பாஜகவுக்கு மட்டும் 370 இடங்கள் கிடைக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe