
இந்தியா-வங்கதேசம் இரண்டாம் டி20- தில்லி- 09.10.2024
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
இந்திய அணி (221/9, நிதீஷ் குமார் ரெட்டி74, ரிங்கு சிங் 53, ஹார்திக் பாண்ட்யா 32, ரிஷாத் ஹொசைன் 3/55, தஸ்கின் அகமது2/16, தன்சிம் 2/50, முஸ்தாஃபிசுர் ரஹமான் 2/36) வங்கதேச அணியை (19.5 ஓவர்களில்127, மகமதுல்லா 40, பர்வேஸ் 16, லிட்டன் தாஸ் 14, மெஹதி 16, அர்ஷதீப் சிங் 1/26, வருண்சக்ரவர்த்தி 2/19, நிதீஷ் குமார் ரெட்டி 1/19, வாஷிங்க்டன் சுந்தர் 1/4, அபிஷேக ஷர்மா1/30, மயங்க் யாதவ் 1/30, ரியன் பராக் 1/16) 86 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளவங்கதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் கொண்ட தொடரில் தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து 3போட்டிகள் கொண்ட டி20 தொடர் 6ஆம் தேதி குவாலியரில் தொடங்கியது. இன்று இரண்டாவது டி20ஆட்டம் தில்லியில் நடைபெற்றது.
இந்தியாவிற்கு எதிரான ஒரே ஒரு டி20 ஆட்டத்தில் இதற்குமுன்னார் வங்கதேச அணி வெற்றி பெற்றிருக்கிறது; அது இந்த மைதானத்தில்தான். அதனால் வங்கதேசஅணி நம்பிக்கையுடன் களமிறங்கியது. டாஸ் வென்று இந்திய அணியை மட்டையாடச் சொன்னது.
இந்திய அணியின் ஆடும் லெவனில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. வங்கதேச அணியில் ஒரு மாற்றம் செய்யப் பட்டிருந்தது. முதல் ஆறு ஓவர்களில்,அதாவது பவர் ப்ளே ஓவர்களில் இந்திய அணி மூன்று விக்கட்டுகளை இழந்து 45 ரன் எடுத்தது.சஞ்சு சாம்சன் (10 ரன்), அபிஷேக் ஷர்மா (15 ரன்), சூர்யகுமார் யாதவ்(8 ரன்) மூவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதன் பின்னர் நிதீஷ் குமார் ரெட்டி(34 பந்துகளில் 74 ரன், 7 சிக்சர், 4 ஃபோர்) மற்றும் ரிங்கு சிங் (29 பந்துகளில்53 ரன், 3 சிக்சர், 5 ஃபோர்) இருவரும் சிறப்பாக ஆடினர். முதல் 40 பந்துகளில் 50 ரன்அடித்த இந்திய அணி அடுத்த 21 பந்துகளில் அடுத்த 50 ரன்களை அடித்தது.
அதற்கடுத்த 23பந்துகளில் மொத்தம் 150 ரன் களையும், அடுத்த 28 பந்துகளில் 200 ரன்னையும் அடித்தனர்.20ஆவது ஓவரில் ஹார்திக பாண்ட்யா (32 ரன்), வருண் சக்ரவர்த்தி (பூஜ்யம்) மற்றும் அர்ஷதீப்(6 ரன்) அடித்து ஆட்டமிழந்ததால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு221 ரன் எடுத்தது.
இரண்டாவதாக ஆடவந்த வங்கதேச அணியில் ஒரு பேட்டர்கூட நீண்ட நேரம் ஆடவில்லை. அனைவரும் “வந்தார்கள் … போனார்கள்” கதைதான். ரெகுலர் பந்துவீச்சாளர்களைவிட்டுவிட்டு இந்திய அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ் இன்று நித்தீஷ் குமார்ரெட்டி, அபிஷேக ஷர்மா, ரியான் பராக் போன்றவர்களை பந்து வீசச் சொன்னார்.
அனைத்து பந்து வீச்சாளர்களும் விக்கட் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிறகு 135ரன் எடுத்து வங்கதேச அணி தோல்வியைத் தழுவியது.
பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் சிறந்து விளங்கிய நித்தீஷ் குமார் ரெட்டி ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டர்.