ஜல்லிக்கட்டால் மாடுகள் கொல்லப்படுகின்றன: மேனகா காந்தி

இந்தியா

Maneka_Gandhi புதுதில்லி: “மனிதர்களையும் மிருகங்களையும் துன்புறுத்தும் ஜல்லிக்கட்டு, மேற்கத்திய கலாசார அடிப்படையிலானது. ஜல்லிக்கட்டின்போது மாடுகளும் மனிதர்களும் கொல்லப்படுகின்றனர். ஜல்லிக்கட்டை பாஜக எதிர்க்கிறது” என்றார் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி. உத்தரப் பிரதேச மாநிலம், பிலிபிட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட மேனகா காந்தி பேசியபோது, ஜல்லிக்கட்டு பாரம்பரியம் மேற்கத்தியக் கலாசாரம். அதற்கு பாஜக எதிர்ப்புத் தெரிவிக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம். விவசாயிகளுக்குப் பயன்படும் பசுக்களும் காளைகளும் ஜல்லிக்கட்டால் கொல்லப்படுகின்றன. அதோடு, ஜல்லிக்கட்டின் போது மனிதர்களும் கொல்லப்படுகின்றனர். மகர சங்கராந்தி (பொங்கல்) பண்டிகை தாவரங்களையும் மரங்களையும் வழிபடுவதற்காகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் அது கொடுமைப்படுத்தும் வகையில் கொண்டாடப்படுவது தவறு என்றார். பாரம்பரியமான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தின் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மத்திய அமைச்சரின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.