எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் முத்துக்கருப்பன்

இந்தியா சற்றுமுன்

PARLIAMENT - 2026

அ.தி.மு.க மாநிலங்களவை  உறுப்பினர் முத்துக்கருப்பன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அ.தி.மு.க மாநிலங்களவை எம்.பி., முத்துக்கருப்பன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு அனுப்பி வைக்கிறார்.

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் மிகுந்த மனவேதனையுடன் ராஜினாமா செய்வதாக அவர் கூறினார்.

காவிரி நீர் பிரச்சனையால் 19 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்னும் 2 ஆண்டுகள் பதவிக்காலம் இருந்தாலும், மக்களுக்காக ராஜினாமா செய்கிறேன்  என விளக்கம் அளித்தார்.

IMG 20180402 WA0036 - 2026

அரசியலுக்காக குடிக்க தண்ணீர்கூட கொடுக்காமல் இருக்கலாமா? என்று கேள்வி எழுப்பிய முத்துக்கருப்பன், ராஜினாமா கடிதத்தை செய்தியாளர்களிடம் வாசித்துக் காட்டி விளக்கம் அளித்தார்.

ராஜினாமா முடிவில் இருந்து பின்வாங்கப போவதில்லை என திட்டவட்டமாக அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.