காங்கிரஸ் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது: மோடி

இந்தியா சற்றுமுன்

கா்நாடக மாநிலத்தில் மே 12-ம் தேதி சட்டமன்ற தோ்தல் நடைபெற உள்ளது. இதற்காக கர்நாடகாவில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மே 1-ம் தேதி முதல் 8-ம் தேதி வரையில் பிரதமர் மோடி பிரசாரம் செய்ய உள்ளார்.

modi 3 - 2026இந்நிலையில்ம் பிரதமர் மோடி, நமோ ஆப்-ன் மூலம் இன்று கர்நாடக பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர்களிடம் காணொலி மூலம் பேசினார், அப்போது அவர், கர்நாடக தேர்தலுக்காக காங்கிரஸ் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக பிரதமர் புகார் தெரிவித்தார். வளர்ச்சி என்ற ஒற்றை இலக்கை நோக்கி பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது என்றும், பொய்யான வாக்குறுதிகளை கூறி குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கு காங்கிரஸ் லாலி பாப் தருகிறது என்றார். மேலும், சாதி அரசியல் செய்பவர்கள் வளர்ச்சியை பற்றி கவலைப்பட மாட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.

225 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தல் முடிவுகள் இழுபறியாகவே இருக்கும் என்று பல்வேறு கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ள நிலையில், வெற்றியை தங்கள் வசமாக்கிக்கொள்ள காங்கிரசும், பாஜகவும் முழுவீச்சில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

கர்நாடகத்தில் மோடி மே 1-ம் தேதியன்று பிரசாரத்தைத் தொடங்குகிறார். 15 முதல் 20 பொதுக் கூட்டங்களில் பங்கேற்று மக்களைச் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார். மே 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதன் முடிவுகள் மே 15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாஜகவுக்கு ஆதரவு திரட்ட உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை களமிறக்கவும் அக்கட்சி திட்டமிட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.