கர்நாடகாவில் துவங்கியது வாக்குப் பதிவு: கடும் போட்டியில் காங்கிரஸ்!

Published:

karnataka elections - 2026

கர்நாடகா சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் துவங்கி நடைபெற்று வருகிறது. 222 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. 222 தொகுதிகளில் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடியும். காங்கிரஸ், பாஜக, ம.ஜ.த. உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்த 2,600 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் சுமார் 4.98 கோடி பேர் வாக்களிக்க 55,600 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் கடந்த 4ஆம் தேதி காலமானார். இதனால் அத்தொகுதிக்கு தேர்தல் நடைபெறவில்லை.

பெங்களூரு ராஜ ராஜேஸ்வரி நகர் தொகுதியில் 10,000 போலியான வாக்காளர் அடையாள அட்டைகள் ஒரு வீட்டில் இருந்து கண்டெடுக்கப் பட்டன. இது தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ., உள்பட 14 காங்கிரஸ் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. எனவே அத்தொகுதியிலும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு வரும் மே 28-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

இவை நீங்கலாக மீதமுள்ள 222 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் மொத்தம் 4,96,82,357 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 2,52,05,820 பேர் ஆண் வாக்களர்கள்; 2,44,71,979 பேர் பெண் வாக்காளர்கள். 4,552 பேர் மூன்றாம் பாலின வாக்காளர்கள்.

மாநிலம் முழுவதும் மொத்தம் 56,696 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று 222 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் வரும் 15-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img