கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ சாலை விபத்தில் உயிரிழப்பு

இந்தியா சற்றுமுன்

07 May28 Sidhu Nyama Gowda - 2026கர்நாடக காங்கிரஸ்  எம்.எல்.ஏ சித்து நியமகவுடா நேற்றிரவு கார் விபத்தில் உயிரிழந்தார்.

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் ஜம்கண்டி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சித்துநியாம் கௌட . இவர் 2975 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை தோற்கடித்தார்.

கர்நாடக தேர்தல் முடிந்து இரண்டு வாரங்களே ஆன நிலையில், நேற்று கோவாவில் இருந்து கார் மூலம் தமது தொகுதியான ஜம்கண்டிக்கு வந்து கொண்டிருந்தார் கௌட. அப்போது எதிரே வேகமாக வந்த லாரி மீது மோதாமல் தவிர்ப்பதற்காக அவரது கார் விலகிச் சென்றது. இதில் எதிர்பாராத விதமாக கார் நிலை தடுமாறி தடுப்புச் சுவர் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த எம்.எல்.ஏ சித்து நியமகவுடாவை பொதுமக்கள் மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.

அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரது உயிரிழப்பால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.