ஏழுமலையானுக்கு ரூ.2 கோடி மதிப்பில் தங்க வாள்: காணிக்கை செலுத்திய தொழிலதிபர்

Published:

19 May29 Thirupathi - 2026தேனியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான தங்க வாளை காணிக்கையாக வழங்கியுள்ளார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த தங்கத்துறை என்பவர் ஏழுமலையான் கோவிலில் வழிபாடு நடத்தினார். பின்னர் 6 கிலோ எடையில் தங்கத்தால் செய்யப்பட்ட 2 கோடி மதிப்பிலான வாளை கோவிலுக்கு அவர் காணிக்கையாக வழங்கினார்.

தேவஸ்தான துணை செயலாளர் இந்த வாளை பெற்றுக்கொண்டார். முக்கிய உற்சவ நாட்களில் ஏழுமலையானுக்கு அருகே தங்க வாள் வைத்து அலங்ககரிக்கப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img