கியூபா, கிரீஸிற்கு ஜனாதிபதி இன்று பயணம்

இந்தியா சற்றுமுன்

06 June16 ram nath govind - 2026

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று முதல் ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா நாடுகளில் ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 17-ம் தேதி முதல் 22 ம் தேதி வரையில் கிரீஸ்,சூரிநாம் மற்றும் கியூபா நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இன்று முதல் 19ம் தேதி வரை கிரீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்யும் அவர் வரலாற்று மற்றும் தொல் பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு செல்ல உள்ளார். தொடர்ந்து 18 ம் தேதி கிரீஸ் நாட்டின் தலைவர்களை சந்திக்கிறார்.இரண்டாம் கட்ட பயணமாக 19ம் தேதி முதல் 21ம் தேதி வரையில் சூரினாம் நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார்.

தொடர்ந்து 3-ம் கட்ட பயணமாக 21 மற்றும் 22ம் தேதிகளில் கியூபா நாட்டிற்கு செல்லும் ராம்நாத் கோவிந்த் அந்நாட்டின் அதிபரை சந்திக்கிறார். கடந்த 1959-ம் ஆண்டிற்கு பின்னர் கியூபா நாட்டிற்கு செல்லும் முதல் ஜனாதிபதி இவராவார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.