அணி திரட்டுகிறார் தங்க தமிழ்ச்செல்வன்! முக்கிய முடிவை வெளியிடுகிறார் தினகரன்!

சற்றுமுன் தமிழகம் மதுரை லைஃப் ஸ்டைல்
thangathamilselvan - 2026
File Picture

அமமுக.,வில் இருந்து, அணி திரட்டுகிறார் தங்க தமிழ்செல்வன்! அமமுகவிலிருந்து எப்படியும் நடவடிக்கை பாயும் என்பதால் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையை மேற்கொண்டுள்ளார்.

தங்க தமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ வெளியான விவகாரத்தில், என்னை பிடிக்காவிட்டால் அமமுகவில் இருந்து நீக்குங்கள் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

ஆடியோ விவகாரம் குறித்து அவர் கூறிய போது, கட்சியைப் பற்றி நான் பேசியது உண்மைதான்; என்னைப் பற்றி அவதூறு பரப்புவது ஏன்?  என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கட்சியைப் பற்றி தங்கதமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ வைரலான நிலையில் விளக்கம் அளிக்கிறார் டிடிவி தினகரன். தங்க தமிழ்செல்வன் பேசிய வாட்சப் ஆடியோ வெளியான நிலையில், இன்று காலை  தேனி மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார் டிடிவி தினகரன். இதன் பின்னர் தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்து முக்கிய முடிவை வெளியிடுவார் என்று கூறப் படுகிறது.

டிடிவி தினகரனை கடுமையாக விமர்சித்த தங்க தமிழ்ச்செல்வன் – ஆடியோ

இந்நிலையில், தாம் ஆடியோவில் பேசிய விவரத்திற்கு தங்கதமிழ்ச்செல்வன் எவ்வித வருத்தமும் தெரிவிக்கவில்லை, என்ற நிலையில் அவர் நீக்கப் படுவார் என்று கூறப் படுகிறது. மேலும், வருத்தம் தெரிவிக்காமல் கட்சியை விட்டு நீக்குங்கள் என தங்கதமிழ்ச்செல்வன் சொல்வதைப் பார்த்தால், தங்க தமிழ்ச்செல்வன் ஏதோ திட்டமிட்டு பேசுவதுபோல் தெரிகிறது என்று அமமுக.,வின் புகழேந்தி கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.