“கவனித்தல்” என்ற ஒரு சொல்லில்.இவ்வளவு அர்த்தங்களா?

Published:

thought provoking - 2026

“கவனித்தல்” என்ற ஒரு சொல்லில் இவ்வளவு அர்த்தங்கள் உள்ளதா என்ற மலைப்பு ஏற்படுகிறது நாம் கவனித்தல் என்ற ஒரு சொல்லை வைத்து எந்த வகையில் எல்லாம் பயன்படுத்துகிறோம் என்பது ஒருபுறம் இருந்தாலும் கவனித்தல் என்ற வினைக்கு என்ன உட்பொருள் என்பதை இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம்-

1) பயணிகளின் அன்பான கவனத்திற்கு ….Attention

2) கூட்டத்துல பேசுனாரு – நல்லா கவனிச்சாங்க ….Listening

3) அவ்வளவு கூட்டத்திலயும் அவரை நல்லா கவனிச்சாங்க …Importance

4) ஆஸ்பத்ரியில நல்லா கவனிச்சாங்க ….Care

5) கல்யாணத்துல நல்லா கவனிச்சாங்க ….Hospitality

6) அவனை போலீஸ் ஸ்டேசன்ல நல்லா கவனிச்சாங்க …Punishment

7) போகும்போது கவனமா போ…..Caution

8) சார் முடிச்சிடுறேன், என்னை கவனிச்சிக்குங்க…..Bribing

கவனித்தலுக்கு இன்னும், வேற அர்த்தங்கள் இருக்கா?

தினசரி. காம் … தினமும் ஒரு நற்சிந்தனை
”கவனித்தல்( listening)”

ஆசிரியர், மற்றும் யாராக இருந்தாலும், தாங்கள் போதிக்கும் பாடத்தைங் சொல்லிக் கொடுக்கும் போது `கவனி…நன்றாக கவனியுங்கள் என்று சொல்வதை நாம் அறிவோம்…

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கவனித்தல்( listening) என்பது மிக முக்கியம்’ .

மற்றவர்கள் பேசும் போது அவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்று விழிப்புணர்வுடன் கூர்ந்து கவனிக்க வேண்டும்…

ஒரு மருத்துவ வகுப்பின் முதல் நாள் ஆசிரியர் ஒரு பிணத்தை வைத்து பாடம் நடத்த ஆரம்பித்தார்.

“ஒரு மருத்துவனுக்கு மிக முக்கியமானது,
நோயாளியின் உடலை தொடவோ, பார்க்கவோ, கூச்சப்படக் கூடாது.

அடுத்தது எதையும் நன்றாக கவனிக்க வேண்டும்”என்று சொல்லி விட்டு தன் விரலை பிணத்தின்
வாய்க்குள் விட்டு பின் வெளியே எடுத்து விரலை முத்தமிட்டார்.

பிறகு மாணவர்களிடம், “சரி எல்லோரும் நான் செய்தது போல செய்யுங்கள்” என்றார். மாணவர்கள் மிகவும் தயங்கினர். ஆனால் நேரம் ஆக ஆக எல்லோரும் செய்ய ஆரம்பித்தார்கள்.

ஒரு கட்டத்தில் எல்லோரும் செய்து முடித்திருக்க ஆசிரியர்,”எல்லோரும் முடித்தாயிற்றா..?நான் பிணத்தின் வாய்க்குள் விட்டது ஆள் காட்டி விரல்.முத்தமிட்டது நடு விரல்…

இனியாவது நன்றாக மற்றவர்கள் செய்வதை, சொல்வதை கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள்.என்றார்.

ஆம்.,நண்பர்களே

உலகில் தினமும் லட்சக்கணக்கான நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. அவற்றைக் கூர்ந்து கவனியுங்கள்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

வாழ்க்கையை நீங்கள் அறியும் தன்மை, புரிந்து கொள்ளும் திறன், அதன் ஆழத்தை ஊடுருவிப் பார்க்கும் ஆற்றல் எல்லாம் கை கூடும்!

எந்தச் செயலையும் ”கூர்ந்து கவனித்தல்” ஒருவனை மேதை ஆக்கும்.

அன்புடன்

தோழர் கற்பகராஜ் – கல்வி பாலம்
???? தினசரி. காம்????

Related articles

Recent articles

spot_img