நெல்லை கண்ணனை கைது செய்யக் கோரி நாளை மெரீனாவில் தர்ணா!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
hraja - 2026

நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி 1.1.2020 மாலை 3.00 மணிக்கு மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே திரு.LG, பொன்னார், CPR மற்றும் நான் தர்ணா போராட்டம் மேற்கொள்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்… என்று பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி குறித்தும், உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் அவதூறு கிளப்பும் வகையிலும், இஸ்லாமியர்கள் அவர்களை ஏன் இன்னும் சோலியை முடிக்கவில்லை, அதை நான் எப்போவோ எதிர்பார்த்தேன் என்றும் கொலை செய்யத் தூண்டும் வகையிலும் பேசிய காங்கிரஸ் பிரமுகர் நெல்லை கண்ணனை கைது செய்யக் கோரி போராட்டங்களை நடத்தி வருகிறது பாஜக.,

ஆனால் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப் பட்டுள்ளது எனினும் மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் தமிழக அரசு எடுக்கவில்லை. இதனால் கோபமடைந்துள்ள பாஜக.,வினர் தங்களது போராட்டத்தை தீவிரப் படுத்தியுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக, நாளை ஹெச்.ராஜா, இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சிபி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சென்னை கடற்கரையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

இதனிடையே, பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தமிழறிஞர் நெல்லை கண்ணன் மீது பாஜகவினர் புகார் அளித்துள்ள நிலையில், அவருக்கு சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ஹெச்.ராஜா, சீமானும் கைது செய்யப் பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.