இங்கிலாந்து நிதி அமைச்சராக … அட நம்ம ‘இன்போசிஸ்’ நாராயணமூர்த்தி மாப்பிள்ள!

Published:

infosys narayanamurthi nepew - 2026

இங்கிலாந்து நிதி அமைச்சராக நாராயணமூர்த்தியின் மாப்பிள்ளை.

பிரிட்டன் தேர்தலில் இந்தியாவைச் சேர்ந்த பலர் வெற்றி பெற்று கீழ் சபையில் அடியெடுத்து வைத்துள்ளனர். இவர்களுடன் புகழ்பெற்ற சாப்ட்வேர் தூண்களுள் ஒருவரான இன்போசிஸ் அமைப்பின் இணை தலைவர் நாராயணமூர்த்தியின் மாப்பிள்ளையும் உள்ளார்.

பிரிட்டன் தேர்தலில் போரிஸ் ஜான்சன் தலைமையில் உள்ள கன்சர்வேட்டிவ் கட்சி மிகப்பெரும் வெற்றியை சாதித்து அதிகாரத்திற்கு வந்துள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சி 364 க்கும் மேலான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கட்சிக்கு கிடைத்த மிக அதிக வெற்றி இதுவே என்று கூறப்படுகிறது.

infosys narayanamurthi nepew4 - 2026

இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் . இவர்களுள் இன்போசிஸ் அமைப்பின் ஸ்தாபகர் நாராயணமூர்த்தியின் மாப்பிள்ளை ரிஷி சுனக் (39) கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் ரிச்மாண்ட் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றுள்ளார்.

பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ரிஷி மிக அருகாமையான வராக கருதப்படுகிறார்.

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்
infosys narayanamurthi nepew1 - 2026

சென்ற அரசாங்கத்தில் துணை நிதி அமைச்சராக பொறுப்பேற்று பணியாற்றி வந்தார். ரிஷியின் வேலைத் திறனில் பிரதமர் போரிஸ் மிகவும் திருப்தி அடைந்ததாக அவருடைய நெருங்கிய வட்டாரம் குறிப்பிடுகிறது. இது குறித்து பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்தல் சமயத்தில் கட்சி வேட்பாளராக போரிஸ் ஜான்சனுக்கு உதவியாக நின்று டிவி சர்ச்சைகளில் சுறுசுறுப்பாக பங்குபெற்ற ரிஷி கட்சியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். வரும் ஆண்டு பிப்ரவரியில் நடக்கப்போகும் கேபினட் விரிவாக்கத்தில் இவருக்கு நிதி அமைச்சர் பதவியை அளிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

தற்போது உள்ள நிதித் துறையை மேலும் விரிவாக்குவதற்கும் சர்வதேச வியாபார துறை போன்ற உப துறைகளை அதனோடு இணைப்பதற்கும் போரிஸ் கருதியுள்ளார். அரசியல் வட்டாரத்தில் இது குறித்து சர்ச்சை ஜோராக நடந்து வருகிறது. புதிதாக ஏற்பாடு ஆகும் இந்த துறையில் பொறுப்புகளை ரிஷிக்கு அளிக்க உள்ளார்கள்.

இன்போசிஸ் சேர்மன் நாராயணமூர்த்தியின் மாப்பிள்ளையான ரிஷி சுனக் இங்கிலாந்தில் ஹாம்ப்ஷைர் கௌண்டியில் பிறந்தார். ஆக்ஸ்பர்டு யுனிவர்சிட்டியில் பிலாசபி, அரசியல், எகனாமிக்ஸ் பிரிவுகளில் பட்டம் பெற்றார். பின்னர் ஸ்டான்பர்டு யுனிவர்சிட்டியில் எம்பிஏ படிக்கும் போது உடன் படித்த நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷதா உடன் காதலில் இறங்கி அவரை 2009 ல் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

infosys narayanamurthi nepew2 - 2026

முன்னாள் பிரதமர் தெரிசா மே அரசாங்கத்தில் கூட அமைச்சராக பணிபுரிந்தார்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

அண்மையில் தேர்தல்களில் வெற்றியின் பிறகு சபையில் பதவி பிரமாணத்தின் போது பகவத்கீதை மீது சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டதாக செய்திகளில் நின்றார்.

கன்சர்வேடிவ் கட்சி ட்ரெஷரி பகுதிக்கு சீஃப் செகரட்டரி ஆக தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார்.

அரசியலுக்கு வரும் முன்பு கோல்ட்மேன் சாச் நிறுவனத்தில் இன்வெஸ்ட்மென்ட் அனலிஸ்டாக சேர்ந்து பின்னர் அதில் பங்குதாரர் ஆனார். அதுமட்டுமின்றி நாராயணமூர்த்தி அமைப்பின் காடம்ரான் வென்சர்ஸ் டைரக்டராகவும் உள்ளார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img