தண்டவாளத்தில் அமர்ந்து மதுவிருந்து; ட்ரோன் கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சிகள்!

Published:

railway platform - 2026

ரயில் தண்டவாளத்தின் மீது அமர்ந்து மதுவிருந்து. ட்ரோன் கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சிகள்.

கரீம்நகரில் பகிரங்கமாக மது அருந்திய 10 பேரை போலீசார் கைது செய்தனர். அதில் நான்கு இளைஞர்கள் தண்டவாளத்தின் மீது அமர்ந்து மது அருந்தினர். டிரோன் கேமராக்களுக்கு இந்த காட்சிகள் தெரிந்ததால் போலீசார் இந்த கும்பலை கைது செய்தனர்.

கரீம்நகர் மாவட்டத்தில் குடிகாரர்கள் தொல்லை அதிகமாகிவிட்டது. எங்குமே இடம் இல்லாததுபோல் ரயில்வே தண்டவாளத்தின் மீது அமர்ந்து மது அருந்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்கள்.

ரயில் வந்தால் உயிர் போகும் என்ற பயம் கூட இல்லாமல் கதை பேசிக்கொண்டே தண்டவாளத்தின் மீது அமர்ந்து ஃபுல்லாக மது அருந்தி பார்ட்டி செய்துகொண்டிருந்தார்கள். இந்த காட்சிகள் அனைத்தும் டிரோன் கேமராக்களுக்கு சிக்கியதால் அவர்கள் இப்போது கம்பி எண்ணுகிறார்கள்.

கரீம்நகர் ரூரல் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் துர்ஷேட் கிராமத்தில் ஞாயிறன்று பகிரங்கமாக மது அருந்திய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

மரங்களின் மறைவில் அமர்ந்து ஒரு குழு மது அருந்திக் கொண்டிருக்கையில் நால்வர் ஒரேயடியாக ரயில் தண்டவாளத்தின் மீது அமர்ந்து மது அருந்தினர்.

ஞாயிறு மதியம் போலீசார் டிரோன் கேமெரா மூலம் இந்த பகுதிகளை பரிசீலித்த போது இந்த காட்சிகள் அவர்கள் கண்களில் பட்டன .

உடனே களத்தில் இறங்கி குடிகாரர்களை கைது செய்த போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தார்கள்.

பகிரங்க பகுதியில் மிக அபாயகரமாக ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியதால் போலீசார் இவர்கள் மீது பல சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img