ஏப்ரல் 22, 2021, 7:57 மணி வியாழக்கிழமை
More

  விருதுநகர் மாவட்டத்தில் 60 சத பேருந்துகள் இயக்கம்!

  சாலைவரி கட்டாத பேருந்துகள் இயக்கவில்லை. எனவே மாவட்டத்தில் சுமாராக 60 சதவிகித பேருந்துகள் மட்டுமே

  virudhunagar-bus
  virudhunagar-bus
  • விருதுநகர் மாவட்டத்தில் 60 சதவிகிதம் மட்டுமே இயங்கும் அரசுப் பேருந்துகள் .
  • தனியார் பேருந்துகளும் முழுமையாக இயங்கவில்லை

  விருதுநகர் மாவட்டத்தில் இன்று பொது போக்குவரத்து தொடங்கியது. 68 நாட்களுக்குப் பின் முழு அளவில் பேருந்துகள் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் இயக்கப்படும் என அரசு அறிவித்தது.

  விருதுநகர் மாவட்டத்தில் இன்று காலை ஆறு மணிக்கு பேருந்துகள் இயங்கத் துவங்கியது. ஆனாலும் அரசுப் பேருந்துகள் முழுமையாக இயங்கவில்லை. சுமார் 60 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

  இது குறித்து அதிகாரிகள் கூறும் போது அரசுப் பேருந்துகளில் சிலவற்றிற்கு சாலை வரிகள் கட்டாத நிலை உள்ளது. அதனால் சாலைவரி கட்டாத பேருந்துகள் இயக்கவில்லை. எனவே மாவட்டத்தில் சுமாராக 60 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது என்று கூறினார்கள்.

  virudhunagar-bus1
  virudhunagar-bus1

  இதே போல விருதுநகர் மாவட்டத்தில் தனியார் பேருந்துகளும் ஐம்பது சதவிகிதம் மட்டுமே இயங்கி வருகிறது. கடந்த சில மாதங்களாக பேருந்துகள் இயங்காத நிலையில், இன்று அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயங்கும் என்று அரசு அறிவித்திருந்தாலும், இன்னும் பேருந்துகள் இயங்குவது இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »