ஏப்ரல் 22, 2021, 7:04 மணி வியாழக்கிழமை
More

  தங்கையை கைவிட்டவனின் நண்பனை கொன்ற அண்ணன்!

  love

  தங்கையை காதலித்து கைவிட்ட இளைஞருடன் உடந்தையாக இருந்த நண்பனை, பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  பண்ருட்டி அடுத்த திருவதிகை பகுதியை சேர்ந்த சக்திவேல் என்ற இளைஞர் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து அவருடன் உறவில் இருந்து விட்டு பின்னர் அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார்

  இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் துறையினர் சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  இந்நிலையில் நேற்று மாலை சக்திவேலின் நண்பர் சாந்தகுமார் திருவதிகை பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த போது பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரன் ஞானவேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 5 பேர் சேர்ந்து என் தங்கையின் வாழ்க்கையை நாசமாக்கிய சக்திவேலுக்கு உடந்தையாக இருந்தது நீதான் என்று கூறி சாந்த குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர் .

  shantha-kumar

  இதனால் படுகாயம் அடைந்து கிடந்த சாந்தகுமாரை அங்கிருந்தவர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் பின்னர் அவரின் உடல் நிலை மிக மோசமாக இருந்ததால் உயர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

  இந்நிலையில் சாந்தகுமார் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தங்கையை காதலித்து அவருடன் தனிமையில் இருந்துவிட்டு அவரை கைவிட்ட காதலன் உடன் இருந்த நண்பரை கொலை செய்திருப்பது பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »