கட்டாயத் தேர்ச்சி கொள்கைக்கு முடிவு: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்

Published:

04 July19 All pass - 2026குழந்தைகள் இலவச, கட்டாய கல்வி பெறும் உரிமை சட்டம், 2009-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன்படி, 1 முதல் 8-ம் வகுப்புவரை மாணவ-மாணவிகள் ‘பெயில்’ ஆக்கப்படாமல், மேல்வகுப்புக்கு அனுப்பப்படுவார்கள். இது, ‘அனைவரும் தேர்ச்சி’ (ஆல் பாஸ்) திட்டம் என்று அழைக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த சட்டத்தில் 2-வது தடவையாக திருத்தம் செய்வதற்கான மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அதை தாக்கல் செய்தார்.

இதன்மூலம், 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு ‘அனைவரும் தேர்ச்சி’ திட்டம் ரத்து செய்யப்படுகிறது.

இந்த மசோதாவை பார்த்ருஹரி மஹதாப் (பிஜு ஜனதாதளம்), சவுகதா ராய் (திரிணாமுல் காங்கிரஸ்), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்), பிரேம்சிங் சாந்துமஜ்ரா (அகாலிதளம்) ஆகியோரும் மசோதாவை ஆதரித்து பேசினர்.

Related articles

Recent articles

spot_img