11 வயது சிறுமி பலாத்காரம் வழக்கில் 66 வயதான ரவிகுமார் வாக்குமூலம்

சற்றுமுன் தமிழகம்

02 July19 Child abuse - 2026சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 11 வயது சிறுமியை 17 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காது கேளாத வாய்பேச முடியாத அந்த சிறுமியை 7 மாதங்களாக அந்த கும்பல் பலாத்காரம் செய்துள்ளது. மிகவும் கொடுமையான முறையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 17 பேரும் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அதிர்ச்சியில் போலீசார் விசாரணையின் போது குற்றவாளிகள் அடுத்தடுத்து கூறிய தகவல்கள் போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்த குற்ற சம்பவத்தின் முதல் குற்றவாளியான 66 வயதான ரவிகுமார் என்ற நபர் சிறுமி வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் ஆப்ரேட்டராக பணிபுரிந்தவர். இவர் இந்த வேலைக்கு வருவதற்கு முன், அதே பகுதியில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் வார்டு பாயாக வேலை பார்த்துள்ளார். அதன் பின்னரே அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் ஆப்ரேட்டராக சேர்ந்துள்ளார்.

பிரசவத்திற்கு பயன்படும் மருந்துகள் அங்கு வேலை பார்த்த போது பிரசவத்தின்போது பெண்களுக்கு ஏற்படும் வலிகளை குறைப்பதற்காக மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகளையும் அதன் விவரங்களையும் தெரிந்து கொண்ட ரவிக்குமார், அந்த மருந்துகளையும், ஊசிகளையும் பயன்படுத்தி சிறுமியை பலாத்காரம் செய்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். முதுமையால் சந்தேகமில்லை தனது முதுமையால் யாருக்கும் தன் மீது சந்தேகம் வரவில்லை என்று கூறியுள்ள ரவிக்குமார் சிறுமியால் வாய் பேச முடியாது என்பதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். பிரசவ நேரத்தில் பெண்களுக்கு கொடுக்கும் வலி மரப்பு மருந்தை கொடுத்து திட்டமிட்டு இந்த கொடுஞ் செயலில் ரவிக்குமார் ஈடுபட்டுள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.