சமூக வலைதளங்களை கண்காணிக்கவும், சந்தேகத்தின் அடிப்படையில் அப்பாவிகள் அடித்துக் கொலை செய்வதை தடுக்கவும், அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு அதிகாரியை நியமிக்க மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.குழந்தை திருடர்கள், மாடு திருடர்கள் என சந்தேகப்பட்டு, கும்பலாக சேர்ந்து அப்பாவிகள் அடித்துக் கொல்லப்படும் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிகரித்துஉள்ளன.பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், சிலர் வதந்தி பரப்புவதால் தான், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதைத் தடுக்க, நாடு முழுவதும், மாவட்ட அளவில், கண்காணிப்பு அதிகாரியை நியமிக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைதளங்களை கண்காணிக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
Popular Categories



