பிடிஐ., பெயரிலும் தில்லுமுல்லு! ‘செய்தி ஊழல்’ அபாயம்! காட்டிக் கொடுத்த சு.சுவாமி!

Published:

rafale swami2 horz - 2026ரஃபேல் விமானம்… இந்திய ராணுவத்தில் பறக்கத் தொடங்கும் முன்னர், அரசியல்வாதிகளின் வாய்களில் இருந்து பத்திரிகைகள் வரை இப்போது விட்டு விட்டு பறக்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக, சுப்பிரமணியம் சுவாமி, ரஃபேல் போர் விமான விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாகக் கூறினார் என்று பிடிஐ., செய்தி அனுப்பியுள்ளதாகக் கூறி இந்தியா டுடே அதை செய்தி உள்ளீடாகக் கருதிக் கொண்டு ஒரு செய்தி வெளியிடது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார் சுப்பிரமணிய சுவாமி. தாம் இப்படி எங்குமே சொன்னதில்லை என்று கூறிய சுவாமி, இதற்காக பிடிஐ மீது ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப் போவதாக அறிவித்தார்.

பிடிஐ., இதைக் கேட்டு அரண்டது. பிடிஐ., சோர்ஸ் என்று பெயரைச் சொல்லி செய்தி வெளியிட்ட போது கண்டுகொள்ளாமல் இருந்த அது, ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப் போவதாக சுப்பிரமணிய சுவாமி கூறியதும், தாங்கள் அப்படி சுப்பிரமணிய சுவாமி பெயரைக் குறிப்பிட்டு எந்த விதமான செய்தியையோ கட்டுரையையோ வெளியிடவில்லை என்று மறுப்பு தெரிவித்து, பின்வாங்கியது.

rafale swami3 - 2026

செய்திகளுக்கு மூலப் புள்ளியாக, முக்கிய ஆதாரமாக பிடிஐ., செய்தி நிறுவனத்தைத் தான் பல செய்தி சேனல்களும், ஊடகங்களும் பத்திரிகைகளும் வைத்துள்ளன. இந்நிலையில் இப்படி ஒரு செய்தி பிடிஐ.,க்கு ஒரு பின்னடைவைக் கொடுத்துள்ளது.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

இதனிடையே, சுப்பிரமணியம் சுவாமி, தம் போக்கில் டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியா டுடே பத்திரிகைகளை சகட்டுமேனிக்கு சாடியிருக்கிறார். வழக்கம் போல் விலைபோன ஊடகங்கள் எனக் குறிப்பிட்டு பெய்ட் மீடியா என விளாசுபவர், அதனை டாய்லட் பேப்பர் என நக்கல் அடித்துள்ளார்.

 

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img