சென்னை: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு, சமூக வலைத்தளத்தில், கருணாநிதி மீது தமிழர்கள் மிகவும் பரிதாபப் படுவதாகவும், ஆனால் அரசியலுக்கு வரும் முன் கருணாநிதியின் சொத்து மதிப்பு எவ்வளவு? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Many Tamilians r sympathising with Karunanidhi hu is hospitalised.But de shud also be asked :what were his assets before he entered politics,& wot r his assets&those of his wives,Stalin,Kanimozhi,Marans & other family members now ?When Kamaraj died he had nothing.What a contrast!
— Markandey Katju (@mkatju) July 30, 2018
தற்போது கருணாநிதி மற்றும் அவரது உறவினர்களின் சொத்து மதிப்பு என்ன என்றும், காமராஜர் உயிரிழந்தபோது அவரிடம் எதுவுமே இல்லை எனவும் மார்கண்டேய கட்ஜு குறிப்பிட்டுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி குறித்த கட்ஜுவின் இந்த கருத்து, சமூக வலைத் தளங்களில் விவாத பொருளாகி வருகிறது. இது குறித்து பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
இதனிடையே, கருணாநிதி சொத்து மதிப்பு குறித்த கட்ஜுவின் கேள்விக்கு திமுக பதிலடி கொடுப்பதாக நினைத்து, சப்பைக் கட்டு கட்டி வருகிறது. கட்ஜுவின் ட்விட்டர் பதிவுக்கு திமுக-வின் சமூக வலைத்தளப் பிரிவு பதிலளித்துள்ளது.
நீங்கள் சங் பரிவார் ஆட்களை போல் வடிக்கட்டிய பொய் சொல்லும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். கருணாநிதி 18 வயதானபோது, முரசொலியை வார இதழாக தொடங்கினார். அது மட்டுமில்லாமல் குங்குமம், முத்தாரம், வண்ணத்திரை மற்றும் ரைசிங் சன் (ஆங்கில இதழ்) ஆகியவையும் அவரால் தொடங்கபட்டது
அதே 18 வயதில் கருணாநிதி நாடகங்களும் எழுதத் தொடங்கியிருந்தார். திராவிடர் கழகத்தின் கொள்கை விளக்கக் கூட்டங்களிலும் பங்குபெற்று வந்தார். அவர் 1949-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த 2 ஆண்டுகளில் மாடர்ன் தியேட்டர்ஸில் கதாசிரியராக மாதம் 500 ரூபாய் சம்பளத்தில் பணியில் இணைந்தார்.
அதே வருடத்தில் செப்டம்பர் 17-ம் தேதி கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் நடந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் தொடக்க விழாவில் பங்குபெற்றார்.
உங்களுடைய சினிமா ரசனையை வைத்து பார்க்கும்போது, உங்களுக்கு(கட்ஜு) தமிழ் சினிமாவின் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் என்.எஸ். கிருஷ்ணனைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த காலகட்டத்தில் ‘மணமகள்’ படத்திற்கு திரைக்கதை எழுதியதற்காக என்.எஸ்.கே-வால் கருணாநிதிக்கு 10,000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது.
தென் இந்தியாவின் மற்றொரு முதுபெரும் சினிமா தயாரிப்பாளர் எல்.வி.பிரசாத், ‘இருவர் உள்ளம்’ திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியதற்காக 10,000 ரூபாய் கருணாநிதிக்கு சம்பளமாக வழங்கினார். அந்த படம் ஹிட் அடித்ததால் மேலும் ஒரு 10,000 ரூபாயும் கருணாநிதிக்கு வழங்கப்பட்டது.
கருணாநிதி தற்போது குடியிருக்கும் வீடு 45,000 ரூபாய்க்கு அவர் அமைச்சர் ஆவதற்கு முன்பே வாங்கப்பட்டது. அது அவருடைய இறப்பிற்குப் பின் மருத்துவமனையாக மாற உள்ளது.
கருணாநிதி முதன்முதலாக 1957-ல் தேர்தலில் நின்றார். ஆனால் அதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பே கோபாலபுரம் இல்லம் வாங்கப்பட்டுவிட்டது. மேலும், அந்த சமயத்திலேயே கருணாநிதியிடம் கார் இருந்தது. அவர் அப்போது சிவாஜி கணேசனை விட இரண்டு மடங்கு சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார்.
உங்களுடைய மனம் அறியாமையால் சூழப்பட்டிருப்பதால். உங்கள் அறிவை மேம்படுத்திக்கொள்ள இந்தப் பத்திரிக்கை செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம் என்று கருணாநிதி 2010-ல் வெளியிட்டுள்ள சொத்து விவரங்களையும் அந்த ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளது.
வழக்கமாக திருடன் திருடன் என்று யாரையோ சுட்டிக் காட்டிக் காட்டி விட்டு திருடிச் செல்பவர்கள்தான் அதிகம். சங் பரிவார் ஏதோ பொய் சொல்வார்கள் என்று திமுக.,வின் வலைத்தளப் பிரிவினர் சொல்வதைப் பார்த்தால்…?!





பெரà¯à®¨à¯à®¤à®²à¯ˆà®µà®°à¯ அவரà¯à®•ள௠காலமான போத௠அவர௠வஙà¯à®•ி கணகà¯à®•ில௠ரூபாய௠1,50/ மடà¯à®Ÿà¯à®®à¯‡ இரà¯à®¨à¯à®¤à®¤à¯ என படிதà¯à®¤à®¤à®¾à®• ஞாபகமà¯.
ஒபà¯à®ªà®¿à®Ÿà¯à®Ÿà¯ பாரà¯à®¤à¯à®¤à®²à¯ சாலசà¯à®šà®¿à®±à®¨à¯à®¤à®¤à¯. à®à®©à¯†à®©à®¿à®©à¯ திரà¯à®•à¯à®•à¯à®µà®³à¯ˆà®¯à®¾à®°à®¿à®©à¯ கà¯à®Ÿà¯à®®à¯à®ª விரà¯à®¤à¯à®¤à®¿à®¯à¯à®®à¯, ஆசியாவிலேயே மிகவà¯à®®à¯ பணகà¯à®•ாரர௠எனà¯à®± பெரà¯à®®à¯ˆà®¯à¯à®®à¯ அடைய யார௠காரணம௠? தி.à®®à¯.க.தானே ? அதன௠தொணà¯à®Ÿà®°à¯à®•ளà¯à®®à¯, விசà¯à®µà®¾à®šà®¿à®•ளà¯à®®à¯ அறியாமையிலேயே இரà¯à®•à¯à®•ிறாரà¯à®•ளà¯, இவரà¯à®•ளà¯à®•à¯à®•௠பகà¯à®¤à¯à®¤à®±à®¿à®µà¯ இலà¯à®²à¯ˆà®¯à®¾ ? பெரà¯à®¨à¯à®¤à®²à¯ˆà®µà®°à¯ அவரà¯à®•ள௠காலமான போத௠அவர௠வஙà¯à®•ி கணகà¯à®•ில௠ரூபாய௠1,50/ மடà¯à®Ÿà¯à®®à¯‡ இரà¯à®¨à¯à®¤à®¤à¯ என படிதà¯à®¤à®¤à®¾à®• ஞாபகமà¯. ஆனால௠?