புது தில்லி: நீட் – அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு மீதான தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக, நாக்பூர் நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக சிபிஎஸ்இ மேல்முறையீட்டு வழக்கு ஒன்றைத் தொடுத்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீட் தேர்வின் அடிப்படையிலான அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு மீதான தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தது. #NEET




